சமகால தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பின்னணி பாடகர்களில் ஒருவர் பிரதீப் குமார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமா வருகையின் போது அழைத்து வந்த வரபிரசாதமாக பிரதீப் குமாரின் குரலை தற்போது ரசிகர்ள் கொண்டாடி வருகின்றனர். முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடி மக்கள் மனதை கவர்ந்தவர் பிரதீப் குமார். இதில் பெரும்பாலான பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. பெரும்பாலான பாடல்கள் இணையத்தில் கோடி பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘ஆசை ஓர் புல்வெளி’ ‘நீ கவிதைகளா’, ‘மேகமோ அவள்’, ‘கண்ணம்மா’, ‘ஆகாயம் தீப்பிடிச்சா’ மற்றும் பல பாடல்கள் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் பிடித்துள்ளது. இதில் குறிப்பாக 2016 ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘மனிதன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘அவள்’ பாடல் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதி காதல் பாடலாக உருவாகிய அவள் பாடல் வெளியான அன்றே நல்ல வரவேற்பை பெற்றது. பின் ஏழு வருடங்கள் கழித்து தற்போது அந்த பாடல் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று வருகிறது.

பிரதீப் குமார் இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக சமீபத்தில் இது மாறியதால் இணையத்திலும் இந்த பாடலை மீண்டும் ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். இதுகுறித்து நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கேட்கையில் அவர்.

"கடந்த வாரம் 'அவள்' பாடல் Spotify - ல் வைரலானது. நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்கு இது போல விஷயங்கள் நடந்தால் mமகிழ்சியாகிடுவேன்.. அந்த பாடல் பண்ணும் போது நான் ரொம்ப விருப்பப்பட்டு பண்ணேன். அந்த பாடல் பதிவு செய்யும் போது சாதாரணமான மைக் கொண்டு தான் பதிவு செஞ்சேன். அந்த நேரத்தில் பிரதீப் ரொம்ப பிஸியாக இருந்தார். நான் கேட்டதும் அந்த பாடலை பாடி கொடுத்தார். அந்த பாடல் ஒரு மாதிரி கலவையான தமிழில் இருக்கும்.‌ஆனால் அதில் நிறைய உணர்வுகள் கலந்திருக்கும். அந்த பாடல் வெளியான போது நான் சந்தோஷமா இருந்தேன். அந்த பாடல் நல்லா போச்சா.. இல்லையானு கவலை படல..இப்போ சமீப காலமா பிரதீப் அந்த பாடலை நிகழ்ச்சிகளில் பாடும்போது அந்த பாடல் பரவலாக தெரிய வருகிறது. அதன்படி கடந்த ஒரு மாதத்தில் அதிகம் கேட்கப்பட்ட என்னுடைய பாடல்களில் அவள் பாடல்தான் முன்னிலை..

அது எனக்கு இதுதான் சந்தோஷத்தை கொடுக்கிறது. மக்கள் பிரதீப் குரலின் அருமையை கண்டறியும் போதும் எனது இசையை புரிந்து கொள்ளும் போதும்.. நான் அந்த இயக்குனருக்கு செய்தி அனுப்பினேன் 6-7 வருஷத்திற்கு பிறகு பாடல் நல்லா போய்ட்டு இருக்கு னு.. அதே போல மகான் பட பிண்ணனி இசை இப்போது மக்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். இதுதான் ஒரு ரசிகருக்கு வெகுமதியாக அமைகிறது.” என்றார் சந்தோஷ் நாராயணன்

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனின் சிறப்பு பேட்டியை காண..