ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்தியாவின் முதல் படம்.. - அரங்கம் அதிரும் கைத்தட்டல்களுடன் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழு..விவரம் இதோ..

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்ற முதல் இந்திய படம் - The elephant whisperer wins Oscar 2023 | Galatta

95வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விருது விழாவில் உலகில் தலைசிறந்த படைப்பாளர்களின் படைப்புகள் பல பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது மேலும் இந்திய திரைப்படமான ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவுகளிலும் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்'  படமும் சிறந்த ஆவண திரைப்படப்பிரிவில் இயக்குனர் ஷனாக் சென்னின் ஆல் தட் பீரித்ஸ் திரைப்படமும் இந்தியா சார்பில் பரிந்துரையில் இருந்தது.

கோலாகலாமாக நடைபெற்ற ஆஸ்கர் பெருவிழாவில் தலைச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், படைப்பாளர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கப் பட தொடங்கியது. விழாவினை மூன்றாவது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆவண குறும்பட பிரிவில்  'ஹால்அவுட்', 'ஹவ் டு யூ மேஷர் அ இயர்?,' 'தி மார்த்தா மிட்சல் எபெக்ட்', 'ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட்' மற்றும் எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆகிய  படங்கள் இடம் பெற்றிருந்தன.

இதில் இந்தியாவை சேர்ந்த ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றது. இவ்விருதினை படத்தை இயக்கிய கார்த்திகி’ கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா பெற்றுக் கொண்டனர்.

'The Elephant Whisperers' wins the Oscar for Best Documentary Short Film. Congratulations! #Oscars #Oscars95 pic.twitter.com/WeiVWd3yM6

— The Academy (@TheAcademy) March 13, 2023

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் இடம் பெற்றிருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைமுகாமான தெப்பக்காட்டில் காட்டுநாயக்கர் பழங்குடியினரான  பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிகள் அங்கு யானைகள் பரமாரிபாளராக பணிபுரிகின்றனர். கடந்த 2017 ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் பகுதியில் தாய் யானையிடம் இருந்து பிறந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றி திரிந்தது.அதனை மீட்டு காப்பகத்தில் சேர்த்து ரகு என பெயரிட்டு பொம்மனும் பெள்ளியும் பராமரித்து வருகின்றனர். இந்த நிகழ்வையும் இந்த நிகழ்வை சுற்றியுள்ள உணர்வு பூர்வமான தருணங்களையும் யானைகளுக்கும் தம்பதியினருக்கும் உள்ள பாசப் பிணைப்பையும் பற்றி ஆவணப் படமாக இயக்கியுள்ளார் உதகையை சேர்ந்த ஆவணப் பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்த உணர்வுபூர்வமான ஆவணப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும்வரவேற்பை பெற்றது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெட்பிளிக்சில் வெளியான இப்படம் இன்னும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில்  படமாக்கப் பட்ட  தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஏற்கனவே பல மேடைகளில் ஏறி அங்கீகாரம் பெற்ற நிலையில் இந்த ஆஸ்கர் விருது மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.இந்தப்பிரிவில்விருதுபெறும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் போட்டியில் கலந்துகொள்ளும் மூன்றாவது படம் என்ற பெருமையும் கொண்டுள்ளது தி எலிபன்ட் விஸ்பரர்ஸ். இதனையடுத்து படக்குழுவினர் இந்நிகழ்வினை கொண்டாடி வருகின்றனர். மேலும் திரை பிரபலங்கள் முக்கிய ஆளுமைகள் இந்நிகழ்வினை வாழ்த்தி வருகின்றது.

மேலும் கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதினை பெற்று மேலும் இந்திய சினிமாவிற்கு பெருமையை பெற்றுள்ளது.  இந்திய சார்பில் சிறந்த ஆவணப் படம் பிரிவில் போட்டியிட்ட ஷனாக் சென்னின் ‘ஆல் தட் பீரித்ஸ்’ விருதினை நழுவ விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் கணக்கு முடங்கியது.. நடந்தது என்ன? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் கணக்கு முடங்கியது.. நடந்தது என்ன? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..

“எனக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் சண்டை?” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலக்ஷ்மி சரத்குமார் – சுவாரஸ்யமான வீடியோவுடன் விவரம் உள்ளே..
சினிமா

“எனக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் சண்டை?” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலக்ஷ்மி சரத்குமார் – சுவாரஸ்யமான வீடியோவுடன் விவரம் உள்ளே..

Time Travel படமாக உருவாகி வரும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’.. - வைரலாகும் இயக்குனரின் அப்டேட்.. விவரம் இதே..
சினிமா

Time Travel படமாக உருவாகி வரும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’.. - வைரலாகும் இயக்குனரின் அப்டேட்.. விவரம் இதே..