தென்னிந்திய திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குனராகவும் வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகராய் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அதன்படி அவரது நடிப்பில் முன்னதாக வெளியான முனி, பாண்டி, காஞ்சனா, 1,2,3 ஆகிய திரைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து மேயாத மான், குலுகுலு, ஆடை பட இயக்குனரும் விக்ரம், மாஸ்டர், லியோ பட வசன கர்த்தாவான ரத்னகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுகிறார் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதை எழுதும் அதிகாரம்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்

இதனிடயே நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து பிரம்மாண்டாமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. கடந்த 2005 ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் ‘வைகை புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஸ்ருஷ்தி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் MM. கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஹாரர் மற்றும் காமெடி கதைகளத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது இறுதிகட்ட பணிகளில் உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சந்திரமுகி கதையில் முக்கிய கதாபாத்திரமாக வரும் ‘வேட்டையன்’ கதாபாத்திரத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாகத்தில் மாஸ் காட்டிய கதாபாத்திரத்தினை சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் அவர் ஸ்டைலில் தோன்றிருக்கும் கதாபாத்திரம் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது..