சமூக ஊடகங்களில் இருந்து விலகும் பிரபல நடிகை குஷ்பூ... வைரலாகும் பதிவு - பின்னணி இதோ..

சமூக ஊடகங்களில் இருந்து விலகும் நடிகை குஷ்பூ விவரம் இதோ - Actress khushbu taking break from all social media | Galatta

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகவும் 80 களில் பிற்பகுதியல் வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. 1988ம் ஆண்டில் வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. அதை தொடர்ந்து வருஷம் 16, சின்ன தம்பி, மன்னன், அண்ணாமலை, வெற்றி விழா, சிங்கார வேலன் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகவும் திரையுலகின் கனவு கண்ணியாகவும் வலம் வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், சரத்குமார், பிரபு, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனி அந்தஸ்தை பெற்றார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில்  நடித்து ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்தவர் நடிகை குஷ்பூ. இறுதியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார். அதையடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் குஷ்பூ நடித்திருந்தார். இப்படத்தில் குஷ்பூ நடித்த காட்சி திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியல் துறையிலும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.  தற்போது பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார்.

இந்நிலையில் நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ அனைத்து விதமான சமூக ஊடகங்களிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்.

“நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு கொஞ்சம் ஒய்வு தேவை என்பதால் அனைத்து விதமாக சமூக ஊடகங்களில் இருந்தும் விலகுகிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை உங்களை கவனித்து கொள்ளுங்கள்.. நலமாக இருங்கள்.. நேர்மறையான எண்ணங்களுடன் இருங்கள் .. “ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Hi friends.. I need some detoxification. Going off the radar. Will connect soon. Till then, take care, be good, stay positive. Love you all. ❤️

— KhushbuSundar (@khushsundar) July 30, 2023

நடிகை குஷ்பூ..நடிகை குஷ்பூவின் பதிவு தற்போது ரசிகர்கள் அதிகளவு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  சில தினங்களுக்கு முன்பு தனது இடுப்பு எலும்பு பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

On the road to recovery! Underwent a procedure for my coccyx bone ( tail bone ) yet again. Hope it heals completely. 🙏 pic.twitter.com/07GlQxobOI

— KhushbuSundar (@khushsundar) June 23, 2023

சினிமா

"நான் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துட்டேன்.!” பாரதிராஜா படத்தில் நடிகை சரிதாவிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. - Exclusive Interview உள்ளே..

தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய பிரம்மாண்ட நாயகன்.! -  இயக்குனர் ஷங்கரின்  30 வருட பயணத்தை வாழ்த்தும் ரசிகர்கள்..
சினிமா ஸ்பெஷல்ஸ்

தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய பிரம்மாண்ட நாயகன்.! - இயக்குனர் ஷங்கரின் 30 வருட பயணத்தை வாழ்த்தும் ரசிகர்கள்..

“காத்திருங்கள்..” தளபதி விஜயின் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்..! – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

“காத்திருங்கள்..” தளபதி விஜயின் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்..! – வைரலாகும் பதிவு உள்ளே..