"தனுஷின் பொல்லாதவன் பார்த்துட்டு வெற்றிமாறனுக்கு கிட்ட பேசுனேன்." நடிகை சரிதா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..

இயக்குனர் வெற்றிமாறன் குறித்து சரிதா பகிர்ந்த தகவல் முழு வீடியோ உள்ளே - Actress saridha about Director Vetri maaran | Galatta

கடந்த 2003ல் பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜூலி கணபதி. இளையராஜா இசையில் உருவான இப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். மேலும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லத்தனதுடன் பிரபல நடிகை சரிதா நடித்திருப்பார். இதுவரை தமிழ் சினிமாவில் ரசிக்ர்களின் மனதை கதாநாயகியாக நடித்து கவர்ந்து வந்த நடிகை சரிதா வித்யாசமான கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தை காட்டி அசத்தியிருப்பார் நடிகை சரிதா. விமர்சன ரீதியாக இப்படத்தை காட்டிலும் நடிகை சரிதாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. 1987 ல் பிரபல நாவல் எழுத்தாளர் ஸ்டீபன் கிங் எழுத்தில் மிசரி என்று வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் கல்ட் திரைப்படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பிரபல நடிகை சரிதா அவர்கள் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சரிதா சிவகார்த்திகேயனின் மாவீரனுக்கு நீண்ட இடைவெளிக்கு முன் தமிழில் நடித்த ஜூலி கணபதி திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசுகையில்,   

“பாலுமகேந்திரா சாரிடம் இருந்து மூன்றாம் பிறை படத்திற்கு அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் அக்னி சாட்சி என்ற படத்தில் நடித்து வந்தேன். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதை என்பதால் அதை வேண்டாம் என்றேன்.  அதன்பின் தான் பாலுமகேந்திரா சாரிடம் இருந்து  ஜூலி கணபதி படத்திற்கு அழைப்பு வந்தது. 

நான் அம்மா கதாபாத்திரமா இருக்கும் னு நினைச்சேன். உடனே அவர் என்னை நேரில் அழைத்து கதை சொன்னார். நான் எப்படி இதில் நான் நடிப்பேன் என்று என்னிடம் கேட்கிறீர்கள் கேட்டேன். அவர் வேறு யாரால் பண்ண முடியும்? என்றார். அதே மாதிரி ஜெயராம் சார் நான் பண்ணல னா இந்த படம் பண்ண மாட்டேன் னு சொன்னார். அதனால் நான் ஜீலி கணபதி பண்ணேன்.  எனக்கு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது.

படப்பிடிப்புல ஒரு ரூம்ல முழுக்க ஏசி.. ஊட்டில நடக்குற மாதிரி என்பதால் அந்த செட் முழுக்க செட் போட்டார். அவர் படத்தில் நான் என்ன பண்ண விருப்புறேனோ அதை பண்ண விட்டார். அது அவருக்கும் பிடித்தது. மேக்கப் கூட போடல.. எனக்கும் அது பிடிக்காது. அவருடனும் அவருடைய குழுவுடன் கூடிய அனுபவம் சிறப்பானதாக அமைந்தது.” என்றார். மேலும் தொடர்ந்து ஜூலி கணபதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய  வெற்றி மாறன் குறித்து கேட்கையில்,

"வெற்றி மாறன் அந்த படத்தில் உதவி இயக்குனரா இருந்தார். அவருடைய முதல் படம் 'பொல்லாதவன்' படம் பார்த்த பின் அவரை அழைத்தேன். அந்த படம் ரொம்ப நல்லாருந்தது. நான் வெற்றிமாறனுக்கு கால் பண்ணி, தனுஷுடனான கூட்டணி அற்புதமா இருந்தது. எல்லா வருஷமும் நீங்க தனுஷ் கூட ஒரு‌ படம் பண்ணுங்க என்று சொல்லிருந்தேன்..” என்றார் நடிகை சரிதா.

மேலும் நடிகை சரிதா நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ...

“காத்திருங்கள்..” தளபதி விஜயின் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்..! – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

“காத்திருங்கள்..” தளபதி விஜயின் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்..! – வைரலாகும் பதிவு உள்ளே..

“வேட்டையன் பராக்.. பராக்..” ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

“வேட்டையன் பராக்.. பராக்..” ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

‘‘நான் அன்று தூக்கமில்லாமல் இருந்தேன்..” அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படம் குறித்து இயக்குநர் நெகிழ்ச்சி..!
சினிமா

‘‘நான் அன்று தூக்கமில்லாமல் இருந்தேன்..” அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படம் குறித்து இயக்குநர் நெகிழ்ச்சி..!