"நான் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துட்டேன்.!” பாரதிராஜா படத்தில் நடிகை சரிதாவிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. - Exclusive Interview உள்ளே..

பாரதிராஜாவின் வேதம் புதிது படத்தில் நடித்த அனுபம் பகிர்ந்த நடிகை சரிதா – Actress saritha about bharathi raja vedham pudhidhu | Galatta

தென்னிந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை சரிதா. தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் நடிகை சரிதா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.  சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாவீரன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சரிதா கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பேசப் பட்டு வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பிரபல நடிகை சரிதா அவர்கள் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1987 ல் வெளியான ‘வேதம் புதிது’ திரைப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் சரிதா நடித்த அனுபவம் குறித்து பேசுகையில், "பாரதிராஜா கதை சொல்லும் போது எனக்கு 18 வயசுதான் இருக்கும். அந்த நேரத்தில வயசான கதாபாத்திரம் கொடுத்தார். ஆனா அவர் படத்தில்  நடிக்க ஆசை இருந்தது. கொஞ்சம் நாள் யோசிச்சு ஓகே சொன்னேன். படத்தில் பொண்ணு கதாபாத்திரம் யார் பன்றா னு கேட்டேன். அவர் சொன்னார் ஒரு 15 வயசு பொண்ணு தான் பார்த்துட்டு இருக்கேன்னு சொன்னார். நானும் சரி னு போயிட்டேன்.

அங்க படப்பிடிப்பு தளத்தில் அமலா இருக்காங்க.. நான் அதிர்ந்து போயிட்டேன்.  நான் ஒரு முறை படம் ஓகே சொல்லிட்டா அதுலருந்து விலக மாட்டேன். அமலா வை விட பெரிய பொண்ணா தெரியனும்னு பேப்பர் வெச்சுலாம் மேக்கப் பண்ணாங்க.. அதனால் எப்படியோ அந்த படத்தை முடிச்சு கொடுத்துட்டேன். எனக்கு அந்த நேரத்துல என்னையே எனக்கு பிடிக்கல.. ரொம்ப மன உலைச்சளோட அந்த படத்தில் நடித்தேன்.

அவங்க முன்ன சொன்னா மாதிரி எதுவும் பண்ணல.. எனக்கு இதையெல்லாம் முன்னாடியே சொல்லி நான் ஓகே சொன்னா பரவால்ல..  எதுவும் முன்னாடி சொல்லாம இதை பண்ணதால ரொம்ப ஏமாற்றமா இருந்தது.எனக்கு அந்த படத்தில் நடித்த அனுபவம் நல்லாவே இருந்தது. இருந்தும் ஏமாற்றம் தான்..  படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பார்த்துட்டு என் கை பிடிச்சி அழுதார் பாரதி ராஜா சார்.. 'ஊருல அம்மா பேசுறா மாதிரி இருக்கு' னு சொன்னார்." என்றார் நடிகை சரிதா. 

தொடர்ந்து, "அந்த படத்தை முடித்து படம் முதல் காட்சி பார்த்தோம். அதன்பின் எனக்கு கொடுத்த சம்பளத்தை திருப்பி கொடுத்துட்டேன்.. நான் மனசு வெச்சு பண்ணாத படம் னு சொல்லி கொடுத்துட்டு வந்துட்டேன்.." என்றார் நடிகை சரிதா.

மேலும் நடிகை சரிதா நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ...

“வேட்டையன் பராக்.. பராக்..” ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

“வேட்டையன் பராக்.. பராக்..” ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

‘‘நான் அன்று தூக்கமில்லாமல் இருந்தேன்..” அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படம் குறித்து இயக்குநர் நெகிழ்ச்சி..!
சினிமா

‘‘நான் அன்று தூக்கமில்லாமல் இருந்தேன்..” அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படம் குறித்து இயக்குநர் நெகிழ்ச்சி..!

‘தளபதி 68’ படத்திற்கு முன்பு ரசிகர்களுக்கு Surprise Gift கொடுத்த வெங்கட் பிரபு.. வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

‘தளபதி 68’ படத்திற்கு முன்பு ரசிகர்களுக்கு Surprise Gift கொடுத்த வெங்கட் பிரபு.. வைரலாகும் பதிவு உள்ளே..