சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அதிவிரைவு சாலையில் உயிரிழந்த கன்னட நடிகர் அதிர்ச்சியில் ரசிகர்கள் - Young actor Lokesh died in road accident on Bengaluru express way | Galatta

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் சாம்ராஜ்நகர் குண்டலுபேட்டை பகுதியில் வசித்து வருகிறார். திரைத்துறையில் நடிகராக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் பயணித்து வரும் இவர் பல குறும்படங்களிலும் சில கன்னட திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் லோகேஷ் புதிதாக பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 29) அதிகாலை 2.30 மணியளவில் தன் சொந்த ஊரான தொடுப்பூருக்கு பைக்கில் சென்றுள்ளார் நடிகர் லோகேஷ். அதற்காக பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையே விரைவு நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளார்.

சொந்த ஊருக்கு சென்றிருந்த லோகேஷ் காலை 5 மணியளவில் எதிர்பாராத விதாமாக லோகேஷ் சென்று கொண்டிருந்த பைக் விபத்துக்குள்ளனதாகியுள்ளது பெங்களூரு-மைசூரு விரைவு நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மாண்டியா மாவட்டம் எலியூரில் இவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கை கால்கள் தூண்டாக்கப்பட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார் நடிகர் லோகேஷ்

பின்னர் வழியில் சென்ற ஒருவர் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு போலிஸ் விரைந்தனர். அதன்பின் விபத்து குறித்து விசாரணை நடத்த லோகேஷ் கார் மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. பின் தீவிர விசாரணையில் விபத்து செய்து தப்பிய காரின் பதிவு எண் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது காவல்துறையினர்.

நடிகர் லோகேஷ் மறைவையடுத்து இவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் அஞ்சலி தெரிவித்துள்ளனர். பெங்களூர் மைசூர் சாலை  பொதுவாகவே விபத்து அதிகம் ஏற்படும் சாலைகளில் ஒன்று.கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட இந்த சாலையில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில்  உயிரிழந்துள்ளனர். மேலும் 300 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய பிரம்மாண்ட நாயகன்.! -  இயக்குனர் ஷங்கரின்  30 வருட பயணத்தை வாழ்த்தும் ரசிகர்கள்..
சினிமா ஸ்பெஷல்ஸ்

தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய பிரம்மாண்ட நாயகன்.! - இயக்குனர் ஷங்கரின் 30 வருட பயணத்தை வாழ்த்தும் ரசிகர்கள்..

“காத்திருங்கள்..” தளபதி விஜயின் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்..! – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

“காத்திருங்கள்..” தளபதி விஜயின் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்..! – வைரலாகும் பதிவு உள்ளே..

“வேட்டையன் பராக்.. பராக்..” ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

“வேட்டையன் பராக்.. பராக்..” ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..