‘தளபதி 68’ படத்திற்கு முன்பு ரசிகர்களுக்கு Surprise Gift கொடுத்த வெங்கட் பிரபு.. வைரலாகும் பதிவு உள்ளே..

தளபதி 68 இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடும் நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படம -  Director venkat prabhu presents new film | Galatta

தென்னிந்திய சினிமாவின் முன்னணி  இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெங்கட் பிரபு. நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பின் கடந்த 2007ல் வெளியான ‘சென்னை 600028’ படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். முதல் படமே ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெற்றி பெற அதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு சரோஜா, கோவா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 – 2 ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படம் இயக்குனரின் திரைபயணத்தில் மட்டுமல்லாமல் அஜித் குமாரின் திரைபயணத்திலும் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக  மங்காத்தா திரைப்படம் இருந்து வருகிறது.எப்படி அஜித் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக மங்காத்தா திரைப்படம் அமைந்ததோ அதே மாதிரி சிலம்பரசனுக்கு ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்திற்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு திரையுலகில் வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக தெலுங்கு தமிழில் உருவாகி வெளியான ‘கஸ்டடி’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் ஏமாற்றத்தை தந்தது. அதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.  

அதன்படி உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜயின் 68 வது திரைப்படமாக உருவாகவுள்ள ‘தளபதி 68’ திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் முழு வீச்சுடன் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அக்டோபரில் ரிலீஸ் ஆகும் லியோ திரைப்படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் தயாரிப்பின் கீழ் ‘தளபதி 68’ திரைப்படம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது தயாரிப்பில் புது படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வெளியான அறிவிப்பில் ஹிப்ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் நடித்து இயக்கியிருக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். மசாலா பாப்கார்ன் தயாரிப்பு மற்றும் வைட் பெதர் ஸ்டுடியோ இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரபல யூடூப்பர்களான வில்ஸ் பட், ஆர் ஜே விஜய், இர்பான், ஆர் ஜே ஆனந்தி, KPY பாலா, ஆர்ஜே விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் AH காஷிப் இசையமைத்துள்ளார். நண்பர்கள் கதைகளத்தில் உருவாகியிருக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தின் முதல் பார்வை பிரச்சாரம் நாளை முதல் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Game, re union, party, Sixee, Polics, Diet, என்ற வரிசையில் இப்படத்தை வெங்கட் பிரபு வெளியிடுவதால் ‘A venkat prabhu Gift’ என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

Nanban oruvan vantha piragu
Your “Tomorrows” will be perfect. So happy to present #NOVP #aVPgift Written & Directed & Performed by @ActorAnanth
Produced by @Aishwarya12dec @masala_popcorn @studios_white
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குமியுமடா!!… pic.twitter.com/2Zm4ognaPd

— venkat prabhu (@vp_offl) July 30, 2023

“சில கேள்விகள் தப்பாயிடுமோனு பயந்தேன்..” அஜித் குமாரை பேட்டி எடுத்த அனுபவம் குறித்து நடிகர் சந்தானம்.. – Exclusive Interview இதோ..
சினிமா

“சில கேள்விகள் தப்பாயிடுமோனு பயந்தேன்..” அஜித் குமாரை பேட்டி எடுத்த அனுபவம் குறித்து நடிகர் சந்தானம்.. – Exclusive Interview இதோ..

அடுத்து என்ன... 'தளபதி 68' - க்கு Hint கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு..! இணையத்தில் ரசிகர்களால் டிரெண்டாகும் பதிவு.. விவரம் உள்ளே..
சினிமா

அடுத்து என்ன... 'தளபதி 68' - க்கு Hint கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு..! இணையத்தில் ரசிகர்களால் டிரெண்டாகும் பதிவு.. விவரம் உள்ளே..

 “எனக்கு இஷ்டமில்லைனு சொல்லும்போது ஒன்றும் செய்ய முடியாது” புரோமோஷன் நிகழ்சிகளில் நயன்தாரா பங்கேற்காதது குறித்து விஷால் கருத்து..!
சினிமா

“எனக்கு இஷ்டமில்லைனு சொல்லும்போது ஒன்றும் செய்ய முடியாது” புரோமோஷன் நிகழ்சிகளில் நயன்தாரா பங்கேற்காதது குறித்து விஷால் கருத்து..!