“காத்திருங்கள்..” தளபதி விஜயின் ‘தளபதி 68’ படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்..! – வைரலாகும் பதிவு உள்ளே..

தளபதி 68 படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு விவரம் உள்ளே - Venkat Prabhu about Thalapathy 68 Update | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் மிக முக்கியமான நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாகவும் இருந்து வருபர் நடிகர் தளபதி விஜய். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும்  தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாரிசு’. பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.  இப்படத்தின் மாபரும் வெற்றியயையடுத்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. மாஸ்டர்  படத்தையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்துள்ளார் தளபதி விஜய். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. அதன்படி தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படம் இறுதி  கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.

வரும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தளபதி நடிப்பில் உருவான லியோ திரைப்படம் உலகமெங்கும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்பை நாளுக்கு நாள் எகிற வைத்து வரும் லியோ திரைப்படத்திற்கு பின் தளபதி விஜயின் ‘தளபதி 68’ படம் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியானாது.

அறிவிப்பின் படி ஏஜிஎஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜயின் 68 வது படம் உருவாகவுள்ளது இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

தொடர் திரைப்படங்களின் அப்டேட்டுகளினால் உற்சாகத்தில் இருந்து வரும் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ் கொடுக்குமளவு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.  சமீபத்தில் இயக்குனர் ஆனந்தன் இயக்கதில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தை வழங்கவுள்ளதாக வெங்கட் பிரபு அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வில் ரசிகர் ஒருவர் தளபதி 68   திரைப்படம் குறித்து அப்டேட் கேட்க, அதற்கு வெங்கட் பிரபு “தளபதி  68 குறித்த அப்டேட் சும்மா தெறிக்கும்.. காத்திருங்கள்.!” என்று பகிர்ந்துள்ளார். இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு பதிவு இணையத்தில் தளபதி விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

T68 announcement chumma therikkum!! Kaathirungal

— venkat prabhu (@vp_offl) July 30, 2023

 

‘தளபதி 68’ படத்திற்கு முன்பு ரசிகர்களுக்கு Surprise Gift கொடுத்த வெங்கட் பிரபு.. வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

‘தளபதி 68’ படத்திற்கு முன்பு ரசிகர்களுக்கு Surprise Gift கொடுத்த வெங்கட் பிரபு.. வைரலாகும் பதிவு உள்ளே..

நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்ஸ்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்ஸ்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு..! விசாரணையில் வெளிவந்த உண்மை.. – விவரம் உள்ளே..
சினிமா

பிரபல நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு..! விசாரணையில் வெளிவந்த உண்மை.. – விவரம் உள்ளே..