இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. இருப்பினும் ரிலீசுக்கு முன்பிருந்தே லியோ திரைப்படத்தின் மீது இருக்கும் மிக முக்கிய சர்ச்சைகளில் ஒன்று படத்தில் தளபதி விஜய் சிகரெட் பிடிப்பது. "நா ரெடி" திரைப்படத்தின் பாடல் வரிகளிலும் அது குறித்த வரிகள் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் நமது கலாட்ட தமிழ் சேனலுக்கு பிரதியாக பேட்டி கொடுத்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தளபதி விஜய் சிகரெட் பிடிப்பது குறித்து பேசும்போது, “புகைப்பிடிப்பது இந்த கதைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக தேவைப்பட்டது. பொதுவாக ஹீரோ புகை பிடிப்பவராக இருப்பார் ஆனால் இந்த படத்தில் அந்த சிகரெட்டை டிசைன் செய்தவரே அவராக தான் இருப்பார். இவர் ஒரு புகையிலை தொழிற்சாலை நடத்துகிறார். ஏற்கனவே பேசியது தான் அந்த ஃபிளாஷ்பேக் காட்சி மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. அந்த ஃப்ளாஷ் பேக் காட்சியின் நேரமே மிகவும் குறைவு ஏனென்றால் இந்த கதைக்கு அது அவ்வளவு தேவைப்படவில்லை. ஏனென்றால் இந்த கதையுடைய மற்ற விஷயங்கள் ரொம்ப பெரியது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இவரை எவ்வளவு நெகட்டிவாக காட்ட முடியும் என்பது தான் எங்களுக்கு இருந்த சவால். அதனால்தான் அந்த சிகரெட்டும் மதுபானமும். அதனால்தான் கதையின் ஆரம்பத்தில் “இதை எப்படி குடிக்கிறீர்கள்” என அவர் கேட்பது போல் ஒரு காட்சி இருக்கும் அதே போல் “ஆல்கஹால் அனுமதி இல்லை” என சொல்லும் ஒரு இடமும் இருக்கும். இதை தவறாக எடுத்துக் கொண்டால் இந்த பாசிட்டிவான விஷயங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி. இது ஒரு டிரான்ஸ்பர்மேஷன் தான். ஒரு கெட்டவன் தம் அடிப்பான் நல்லவன் அடிக்க மாட்டான் என்பது தான் லோகேஷ் கனகராஜ் உடைய ஒரு கொள்கை. அதற்காக சினிமாவில் இதை கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டுவது தான். இப்போது பார்த்தீர்கள் என்றால் ஒருவேளை சில படங்களில் போதைப் பொருள்களை பயன்படுத்துவது என்பதை ரொம்ப நிஜமாக காட்டினோம் என்றால் பார்ப்பவர்கள் அதை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். அதுவே அந்த விஷயத்தை கொஞ்சம் ஃபான்டஸியாகவும் ஃபன்னாகவும் காட்டும்போது அது ஒரு பேன்சி டிரஸ் காம்படிஷனுக்கான ஒரு டச் தான் வருமே தவிர பார்ப்பவர்கள் அதை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் நிஜ வாழ்க்கையில் சிகரெட் பிடிப்பவர்களுக்கும் சிகரெட் பிடிப்பவர்கள் மாதிரி நடிப்பவர்களுக்குமே பெரிய வித்தியாசம் தெரியும். சிகரெட் பிடிப்பது போல் நடிப்பவர்களை பார்த்தீர்கள் என்றால் மிகவும் ஸ்டைலாக பிடித்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் உண்மையில் சிகரெட் பிடிப்பவர்கள் அந்த ஸ்டைல் எல்லாம் இல்லாமல் மிகவும் சீரியஸாக பிடித்துக் கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி சீரியஸாக காட்டக்கூடாது என்பது தான் என்னுடைய நோக்கம். அது எவ்வளவு தூரம் விளையாட்டாக செய்தால் அது ஒரு ஸ்டைலான விஷயமாக போகுமே தவிர சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தை வெளிப்படுத்தாது என்பதற்காக தான் அதற்குள் சில விஷயங்களை செய்தோம். எது எதற்கோ மோக்கோபோட் பயன்படுத்தியது போல் ஒரு தம் அடிப்பதற்கு மோக்கோபோட் பயன்படுத்தினோம் என்றால் அந்த ரியலிசத்தில் இருந்து வெளிப்படுத்தி காட்டுவதற்காகத்தான்.” என பதிலளித்திருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் அந்த முழு பேட்டி இதோ…