தலைவர் 170 சர்ப்ரைஸ்: ட்ரெண்டாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சனின் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!

ரஜினிகாந்த் அமிதாப் பச்சனின் தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்,rajinikanth amitabh bachchan shooting spot photo from thalaivar 170 | Galatta

பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் தலைவர் 120 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனின் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். என்றென்றும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் தனது திரைப் பயணத்தில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அதே வேகத்தோடு தொடர்ந்து அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே ஏதோவித்த வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் செய்து இருக்கிறது.

அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வருகிறார் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தலைவர் 171 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த தலைவர் 170 திரைப்படத்தின் சில பகுதிகள் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட இருப்பதாகவும் இதுவரை இந்திய சினிமா பார்த்திராத புதிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன. முன்னதாக பிரபல இயக்குனரும் தனது மகளுமான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். கிரிக்கட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியிடாய் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே தனது திரை பயணத்தில் 170 ஆவது திரைப்படமாக உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழு கவனம் செலுத்தி வருகிறார். உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றான ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த தலைவர் 170 திரைப்படத்தில் முதல்முறையாக நடிகை மஞ்சு வாரியர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். மேலும் பாலிவுட் நட்சத்திர நாயகர் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன்  ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த தலைவர் 170 திரைப்படத்தில் GM.சுந்தர் மற்றும் விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். SR.கதிர் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் தலைவர் 170 திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெய் பீம் திரைப்படத்தைப் போலவே இந்த தலைவர் 170 திரைப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக கூடும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கடந்த அக்டோபர் 4ம் தேதி தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “ஒரு நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக தலைவர் 170 இருக்கும்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைவர் 170 படத்தில் இணைந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் அவர்களின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அந்த புகைப்படம் இதோ…
 

When Superstar and Shahenshah met on the sets of #Thalaivar170 🤩

Reunion on screens after 33 years! 🤗 #Thalaivar170 is gonna be double dose of legends! 💥 @rajinikanth @SrBachchan

Done with MUMBAI Schedule 📍📽️✨@tjgnan @LycaProductions #Subaskaran @gkmtamilkumaranpic.twitter.com/LfyV3rP2JI

— Lyca Productions (@LycaProductions) October 29, 2023