சீயான் 62: சீயான் விக்ரமின் அடுத்த அதிரடி பட இயக்குனர் யார் தெரியுமா..?- ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அறிவிப்பு வீடியோ இதோ!

சீயான் விக்ரமின் 62 வது பட அறிவிப்பு வீடியோ,chiyaan vikram in 62nd movie announcement | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சீயான் விக்ரம் தனது திரைப்பயணத்தில் 62 ஆவது திரைப்படமாக நடிக்கும் சீயான் 62 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியானது. இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அந்த கதாபாத்திரத்திற்கான முழு நியாயம் செய்யும் அளவிற்கு தன் உடலையும் வருத்திக்கொண்டு தன் படைப்புகளால் மக்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் சீயான் விக்ரம். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 & 2 படங்களில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து ரசிகர்களை கவர்ந்த சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி ஆக்சன் திரில்லர் படமான துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்கு பிறகு தற்போது ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது. வருகிற நவம்பர் 24ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் வெளிவர இருக்கிறது. 1800 களின் காலகட்டத்தில் கேஜிஎப் கதை களத்தில் நடக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த தங்கலான் திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் PAN INDIA படமாக உலக அளவில் மிகவும் பிரம்மாண்டமாய் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக சீயான் விக்ரம் நடிக்கும் சீயான் 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனரும் சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்து பெரும் பாராட்டுகளை பெற்ற சித்தா படத்தின் இயக்குனருமான இயக்குனர் SU.அருண்குமார் முதல்முறையாக மூலம் நடிகர் சீயான் விக்ரமை இயக்குகிறார். தெய்வத்திருமகள், தாண்டவம் மற்றும் தங்கலான் திரைப்படங்களைத் தொடர்ந்து சீயான் விக்ரமின் இந்த புதிய திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இந்த சீயான் 62 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் சியான் விக்ரம் கடைசியாக நடித்த கோப்ரா பொன்னியின் செல்வன் தங்களான் உள்ளிட்ட படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கதாபாத்திரத்தில் வரும் இந்த அறிவிப்பு வீடியோ தற்போது அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சாதாரண வேஷ்டி சட்டையில் ஆக்ரோஷமான ஒரு ஆளாக காவல் நிலையத்திற்குள் புகுந்து அதிரடி காட்டும் சீயான் விக்ரமின் கையில் கலைவாணி என்ற பெயர் கலைவணி என பச்சை குத்தப்பட்டு பின்னர் திருத்தப்பட்டது போல் இருப்பதில் இருந்து இந்த அறிவிப்பு ப்ரோமோவின் ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களும் ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. அட்டகாசமான சீயான் விக்ரம் 62 திரைப்படத்தின் அறிவிப்புப் ப்ரோமோ இதோ…