தீபாவளி சரவெடியாக வரும் கார்த்தியின் ஜப்பான்... பக்கா மாஸ் ஆக்சன் ட்ரீட்டாக ரசிகர்களை கவர்ந்த கலக்கலான ட்ரெய்லர் இதோ!

கார்த்தியின் 25வது படமாக வரும் ஜப்பான் பட ட்ரெய்லர்,karthi in japan movie trailer out now | Galatta

அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வரும் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் அவரது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. பருத்திவீரன் படத்தில் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கி தற்போது 25 திரைப்படங்களை கடந்து மக்களின் மனதை வென்ற நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU யூனிவர்சில் முதல் படமாக வந்த கைதி திரைப்படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் கார்த்தி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் கைதி 2 திரைப்படத்தில் இணைய இருக்கிறார். 

முன்னதாக சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் தனது 26 ஆவது திரைப்படமாக உருவாகும் #கார்த்தி26 திரைப்படத்தில் தற்போது நடித்துவரும் கார்த்தி தொடர்ந்து தனது 27ஆவது திரைப்படமாக 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் எழுதி இயக்கும் #கார்த்தி27 படத்திலும் நடிக்கிறார். கார்த்தி உடன் இணைந்து அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் #கார்த்தி27 படத்தில் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இது குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது 25வது திரைப்படமாக முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான்.

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்யும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

வரும் தீபாவளி வெளியீடாக ஜப்பான் படம் ரிலீஸ் ஆன அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மிகப்பெரிய நகை கடைகளில் கொள்ளையடிக்கும் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கும் இந்த ஜப்பான் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று இரவு ஜப்பான் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லரும் வெளியானது. கார்த்தியின் ஜப்பான் என்ற கலக்கல் கேரக்டரின் ஒரு மீன் குட்டி திமிங்கலமான கதையை சொல்லும் இந்த ட்ரெய்லர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கெட்டப், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் கார்த்தியின் கலக்கலான ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் இதோ…