"லியோ தான் LCUல மோசமான வில்லன்!"- லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் தளபதி விஜயின் கேரக்டர் பற்றி பேசிய மனோஜ் பரமஹம்சா!

தளபதி விஜயின் லியோ கேரக்டர் பற்றி பேசிய மனோஜ் பரமஹம்சா,Thalapathy vijay in leo is a dangerous villain of lcu manoj paramahamsa | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் உருவாக்கி இருக்கும் LCU என்ற யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ தாஸ் கதாபாத்திரம் தான் இருப்பதிலேயே மோசமான வில்லன் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியிருக்கிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது ரிலீசான ஒரே வாரத்தில் 461 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை லியோ படம் படைத்திருக்கிறது.

கில்லி, ஆதி, திருப்பாச்சி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு ஐந்தாவது முறையாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். 

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தப்படியே தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCUவில் இடம்பெற்று இருப்பது இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்கள், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் உருவாக்கி இருக்கும் இந்த LCU யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ தாஸ் கதாபாத்திரம் தான் மிகவும் மோசமான வில்லன் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அப்படி பேசும் போது, 

"இதை யூனிவர்ஸ் என்று சொல்வதா என்னவென்று சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் லோகேஷ் சார் என்ன நம்புகிறார்கள் என்றால் விஜய் சார் தான் இந்த LCUவின் மிக மோசமான வில்லன். அவரை பொறுத்த வரைக்கும் எந்த ஹீரோவையும் வைத்து அவர் யோசிக்கும் போது, விஜய் சார் பார்த்தீர்கள் என்றால் அவர் வயதிற்கு இருக்கும் அனைவரையும் விட மிக சக்தி வாய்ந்த இடத்தில் தான் அவர் இருக்கிறார். மற்ற வில்லங்களை வைத்து யோசிக்கும் பொழுது ரோலக்ஸ் விக்ரம் இவர்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது கூட, யாரை ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த மாஸ் பெர்பார்மன்ஸ் உடல் தோற்றம் இதை வைத்து ஒருத்தரை அப்படி பெரிதாக நிற்கவைக்க இவைகள் தான் ஒரு வளமான விஷயங்களாக இருக்கும் அதனால் இவரை கொல்வதற்கு இது ஒன்றுதான் வழி. இவரை கொன்றால் மட்டும் தான் இவர்களுக்குள் ஒரு பழிவாங்கும் விஷயமே உருவாகும் இன்னும் வில்லன் வந்து இவரை காலி செய்வது என்று எவ்வளவு டிஸ்கஸ் செய்தது தான்… அது நடக்காது"

என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.