தளபதி விஜயின் லியோ பட வெற்றி விழா & தலைவர் 171 என லோகேஷ் கனகராஜ் கொடுத்த தரமான அப்டேட்கள்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

லியோ வெற்றி விழா தலைவர் 171 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்,lokesh kanagaraj shared update of thalaivar 171 leo success meet | Galatta

மாநகரம் திரைப்படத்திலிருந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி அடுத்தடுத்து தன் பாணியில் அதிரடி ஆக்சன் படங்களாக கைதி மாஸ்டர் விக்ரம் என தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படமும் மெகா ஹிட் ஆகியிருக்கிறது மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படம் மிரட்டலான ஆக்சன் ட்ரீட்டாகவும் அட்டகாசமான விஷுவல் ட்ரீட்டாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் தலைவர் 171 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கிறார். அதன் பிறகு அடுத்தடுத்து கைதி-2 ரோலக்ஸ் விக்ரம் 2 இரும்பு கை மாயாவி என வரிசையாக பல படங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் இருந்து ரசிகர்களுக்கு விருந்தாக வர காத்திருக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 171 திரைப்படம் எப்போது ஆரம்பமாகும்?" என கேட்டபோது, “இப்போது தானே இந்த படம் (லியோ) முடிந்திருக்கிறது. கொஞ்ச நாட்கள் ஓய்வெடுத்து விட்டு விரைவில் ஆரம்பித்து விடுவோம் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் இருந்து தலைவர் 171 ஆரம்பமாகும்.” என தெரிவித்தார். மேலும் அவரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 171 திரைப்படம் என்ன மாதிரியான படமாக இருக்கும்? என கேட்டபோது, “இல்லை நான் இனிமேல் தான் அதை எழுத வேண்டும் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட் கொடுக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். 

தொடர்ந்து அவரிடம், “தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது அது உண்மைதானா?” என கேட்டபோது, “இன்னும் இரண்டு நாட்களில் அது குறித்த அப்டேட் உங்களுக்கு தெரிய வரும் அதற்காக திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.” என்றார். தொடர்ந்து “நேரு ஸ்டேடியத்தில் விஜயின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது?” என கேட்டபோது, “உண்மையில் நான் வெளியூரிலிருந்து இப்போது தான் வருகிறேன் இன்னும் யாரையும் பார்க்கவில்லை நேராக இந்த விழாவிற்கு தான் வந்திருக்கிறேன். இதற்கு பிறகு தான் தயாரிப்பாளர்களை போய் சந்திக்க போகிறேன். பார்த்த பிறகு ஏதாவது அப்டேட் கிடைத்தது என்றால் உங்களுக்கு சொல்கிறேன்” என பதில் அளித்தார். அதேபோல், “உங்களுக்கும் தளபதி விஜய் அவர்களுக்கும் ஏதோ ஒரு முரண்பாடு இருக்கிறது என்று படம் வெளியானதில் இருந்தே ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது” என கேட்டபோது, “தெரியவில்லை இதெல்லாம் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை.” இந்த வெற்றி விழா நடந்தால் விஷயம் உங்களுக்கே தெரிய வரும்" என பதில் அளித்தார். இன்னும் சில முக்கிய கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்து இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அந்த ஸ்பெஷல் வீடியோ இதோ…