இந்த ஆண்டு ஜனவரி மாதம் விஜயின் ‘வாரிசு’ திரைப்படம், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படங்கள் வெளியாகி கோலாகல கொண்டாட்டத்துடன் அமைந்தது. அதன் பின் பிப்ரவரியில் வரிசையாக நிறைய ஆச்சர்யமளிக்கும் திரைப்படங்கள் வெளியானது. அதன்படி ‘பொம்மை நாயகி’. ‘ரன் பேபி ரன்’,’டாடா’, ‘வாத்தி’ ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. இளம் இயக்குனர்களாலும் இளம் நடிகர்களாலும் நிரம்பிய பிப்ரவரியையடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் திரைப்படங்கள் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகவிருக்கின்றது. அதன் படி வரும் மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் அட்டகாசமான ஹீரோக்கள் , இயக்குனர்களின் திரைப்படங்களின் பட்டியலை விளக்குகிறது இந்த பட்டியல்..

பகீரா

தமிழில் நீண்ட நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்பில் இருக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் 'பகீரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா வித்யாசமான பல கெட்டப்களில் மிரட்டியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையை டிரைலர் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய பகீரா திரைப்படம் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி வெளியாகவுள்ளது.

அயோத்தி

இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் குக் வித் கோமாளி புகழ் யாஷ்பால் ஷர்மா ஆகியோர் நடிப்பில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக உருவாக பட்ட திரைப்படம் அயோத்தி. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மக்களின் எதிர்பார்ப்பை உருவாக்கியது. சசிகுமாரின் அயோத்தி வரும் மார்ச் 3 ம் தேதி வெளியாகவுள்ளது.

பல்லு படாம பாத்துக்க

யூடியூப் பிரபலம் விஜய் வரதாஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சித்தா ரெட்டி, மொட்ட ராஜேந்திரன், தீனா, ஷா ரா உள்ளிட்டோர் நடிப்பில் ஜோம்பி கதைக்களத்தில் உருவான திரைப்படம் ‘பல்லு படாம பாத்துக்க’ அட்டகாசமான நகைச்சுவை காட்சிகளுடன் இப்படத்தின் டிரைலர் 3 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது நீண்ட நாள் கழித்து இப்படம் வரும் மார்ச் 3 ம் தேதி வெளியாகிறது.

அகிலன்

ஜெயம் ரவியின் கரடு முரடான தோற்றத்தில் துறைமுகம் சார்ந்த கதைகளத்தில் உருவான ஆக்சன் திரைப்படம் ‘அகிலன்’. வரும் மார்ச் 10 ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் வெற்றிக்கும் பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படமும் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மெமரீஸ்

'ஜீவி' புகழ் வெற்றி நடிப்பில் அடுத்து ஒரு வித்யாசமான கதைகளத்தில் உருவாகியிருக்கும் 'மெமரீஸ்' திரைப்படம் வரும் மார்ச் 10 ம் தேதி வெளியாகவுள்ளது.

கொன்றால் பாவம்

பிரபல கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான கொன்றால் பாவம் திரைப்படம் வரும் மார்ச் 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கண்ணை நம்பாதே

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’ . இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரபல திரைப்படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கிய இந்த திரைப்படம் வரும் மார்ச் 17 வெளியாகவுள்ளது.

N4

பல விருதுகளை பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்ற திரைப்படம் 'என் மகன் மகிழ்வான்' (My son is gay) இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் 'N4'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் இரண்டு ஆண்டுக்கு முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் லோகேஷ் குமாரின் N4 திரைப்படம் வரும் மார்ச் 17 vவெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்து தல

சிலம்பரசன் TR நடிப்பில் இயக்குனர் ஒபெலி கிருஷ்ணன் இயக்கத்தில் அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக உருவான ‘பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30 ம் தேதி வெளியாகவுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் ஆரவாரத்துடன் பத்து தல திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தசரா

நானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தசரா’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படத்தின் டிரைலர் பாடல்கள் முன்னதாக வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் 30 ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

விடுதலை

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் வரும் மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஜெயமோகன் ‘தூயவன்’ சிறுகதை அடிப்படையாக உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது முதல் பாகம் மார்ச் மாதத்திலும் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.