இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான நேர்காணலில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில்,

“நீங்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா இருவரிடமும் இந்த கதையை சொன்னவுடன் அவர்களுடைய உடனடி ரியாக்ஷன் என்னவாக இருந்தது?” எனக் கேட்டபோது, “உடனடி ரியாக்சன் என்றால் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மிகவும் உற்சாகமாகிவிட்டார்.. ஓகே சொல்லிவிட்டார். அவர் எதிர்பார்த்த ஒரே விஷயம் என்னவென்றால் அவர்களுடைய அந்த மாஸ் கமர்சியல் விஷயங்கள் இருந்தது அவர் ஜிகர்தண்டா படத்திலேயே மிகவும் குறிப்பிட்டு பார்த்தது அந்த அசால்ட் சேது உடைய கதாபாத்திரம் தான். பார்த்தீர்கள் என்றால் பாபி சிம்ஹா என்றால் யார் என்று அப்போது யாருக்கும் தெரியாது. அந்த அசால்ட் சேது கதாபாத்திரம் திரையில் வரும் போது மக்கள் கைதட்டுகிறார்கள் கொண்டாடுகிறார்கள். அது மாதிரியான விஷயங்களை தான் அவர் பார்த்தார். அது மாதிரியான ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என அவருக்கு அது பிடித்தது. ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும்போது அது வேறு ஒரு மீட்டரில் இருந்தது. அது ஆரம்பத்தில் அவருக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தது அதன் பிறகு அவர் உள்ளே வந்து விட்டார். ஆனால் கதையை பொருத்தவரையில் அவர் மிகவும் உற்சாகமாக ஆகிவிட்டார். அதேபோல்தான் SJ சூர்யா சார் அவர்களுக்கும், “நான் மீண்டும் ஒரு இயக்குனர் என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என நினைக்கிறேன் ஏனென்றால் தற்போது மக்கள் என்னை ஒரு நடிகராகவே பார்க்கிறார்கள் எல்லோரும் என்னை நீங்கள் இயக்குனராக மீண்டும் படங்களை இயக்குங்கள் என்று முன்பெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் இறைவி படத்திற்கு பிறகு தான் நான் முழுக்க முழுக்க ஒரு நடிகராக ஒரு பயணத்தில் போய்க் கொண்டிருக்கிறேன் இப்போது எல்லோரும் நீங்கள் இயக்குனராக வேண்டாம் நடித்துக் கொண்டே இருங்கள் என்று தான் சொல்கிறார்கள்” என்றார் அவரிடம் இதிலும் நீங்கள் நடிக்கத்தான் போகிறீர்கள் சார் அந்த கதாபாத்திரம் தான் ஒரு இயக்குனர் ஆனால் நீங்கள் நடிக்க தான் போகிறீர்கள் என்று சொன்னேன். “இல்லை எனக்கு கதை ரொம்ப பிடித்து இருக்கிறது அந்த ஒரு விஷயம் தான்” என சொல்லிவிட்டு எனக்கு ஒரு ஐந்து நாட்கள் டைம் கொடுங்கள் என்று கேட்டார். என்னைப் பொறுத்தவரைக்கும் ஐந்து நாள் யோசித்து எப்படி முடிவு சொல்ல முடியும் உடனடியாக சொல்வது தான் ஒரு முடிவாக இருக்கும். அதனால் வேண்டாம் சார் என அவரிடம் சொல்லிவிட்டு வேறு சிலரை பார்க்கப் போய்விட்டேன். ஆனால் எனக்கு எதுவும் சரியாக அமையவில்லை அவரும் மீண்டும் என்னிடம் சொல்லும் போது “இந்த ஒரு விஷயம் தான் எனக்கு கொஞ்சம் தடுக்கிறது ஏற்கனவே இறைவி படத்தில் இயக்குனராக நடித்திருக்கிறேன் மீண்டும் இந்த படத்திலும் ஒரு இயக்குனர் அந்த ஒரு விஷயம் தான் எனக்கு ஓடுகிறது. மற்றபடி நான் இந்த கதையை மிகவும் விரும்புகிறேன்” என எனது தயாரிப்பாளர் இடம் தெரிவித்திருக்கிறார். அதை என் தயாரிப்பாளர் தெரிவித்தவுடன் சரி பண்ணலாம் என முடிவெடுத்து விட்டேன் ஏனென்றால் நான் எழுதும் போது இந்த கதைக்கு SJ சூர்யா சார் தான் மிகச் சரியாக இருப்பார் என நினைத்திருந்தேன் அவர் முதலில் வேண்டாம் என்று சொன்னதும் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது அவர் மீண்டும் வந்தவுடன் எல்லாம் சரியாகி விட்டது. என்றார் அந்த முழு பேட்டி இதோ...