தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் ஸ்டைலான திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடித்து பக்கா ஆக்சன் படமாக தயாராகி நீண்ட காத்திருப்பதற்குப் பிறகு வருகிற நவம்பர் 24 ஆம் தேதி வெளி வருகிறது துருவ நட்சத்திரம் திரைப்படம். இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் நமது திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் “உங்களுடைய படங்கள் சரியாக போகவில்லை என்றால் அதிலிருந்து எப்படி மீண்டு வருவீர்கள்... அது மட்டும் கேள்வி அல்ல. உங்களுடைய வாய்ஸ் ஓவர்... உங்களுடைய கடைசி இரண்டு படங்கள் வாய்ஸ் ஓவருக்காக ட்ரோல் செய்யப்பட்டன..” எனக் கேட்டபோது,

“ஆம் அது என்னை தொந்தரவு செய்தது. அது என்னை கொஞ்சம் கீழே இறக்கியது. தனுஷ் படத்தில் (எனை நோக்கி பாயும் தோட்டா) தான் அது நடந்தது. அது உண்மையிலேயே வலித்தது. அது ஒட்டுமொத்தமாக என் படங்களில் நன்றாக இல்லை என நான் சொல்ல மாட்டேன். இப்போதும் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். முதல் இரண்டு - மூன்று வாரங்கள் மிகுந்த வலியுடன் இருந்தது. எனை நோக்கி பாயும் தோட்டா... அது எனக்கே தெரியும். பின்னர் நடுநிசி நாய்கள் மற்றும் பச்சைக்கிளி முத்துச்சரம் அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். வெந்து தணிந்தது காடு படத்தின் வசூலை பொருத்தவரை நான் எதிர்பார்த்த வசூல் வரவில்லை. ஒரு நகர்ப்புறத்தை சார்ந்த நவீனமான ஒரு படத்தை தான் என்னிடமிருந்து எதிர்பார்த்ததாக எனக்கு வந்தது. அது நியாயமற்றது. நீங்கள் ஒருவரின் முந்தைய படைப்புகளை வைத்து எடை போடுவது நியாயமற்றது என நினைக்கிறேன். ஏன் அந்த மாதிரியான படங்களை எதிர்பார்க்க வேண்டும் போய் ஒரு படத்தை அதில் என்ன ஸ்பெஷலாக இருக்கிறதோ அதை அந்த படமாகவே பார்க்க வேண்டும். அதேபோல் அஜித்குமார் அவர்களின் என்னை அறிந்தால் படம் நான் மிகப்பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. அஜித் சாரோட அடுத்த படம் வந்தபோது என்னிடம் ஒருவர் சொன்னார், “அந்தப் பெண் குழந்தை இந்த படத்தில் (என்னை அறிந்தால்) அவரது குழந்தை கிடையாது. ஆனால் அவளுக்காக இவர் தன் வாழ்க்கையே மாற்றிக் கொண்டு எல்லாமே செய்வார். ஆனால் அடுத்த படத்தில் (விஸ்வாசம்) அந்தப் பெண் குழந்தை அவருடைய குழந்தை, அவர் தள்ளி இருந்து அந்த குழந்தைக்கு பாதுகாவலராக இருக்கிறார் அது எல்லோருக்கும் கனெக்ட் ஆனது” என்று சொன்னார். இப்படி பல கருத்துக்கள் வரும் அவை அனைத்திற்கும் பின்னால் நான் போவதில்லை. நான் செய்த பணிகளில் எதெல்லாம் இன்னும் சரி செய்திருக்கலாம் எழுத்தில் எதையெல்லாம் இன்னும் சரி செய்திருக்கலாம் என்று பார்ப்பேன்.” என தெரிவித்து இருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அந்த சிறப்பு பேட்டி இதோ…