மெர்ரி கிறிஸ்மஸ்: லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான் படங்களோடு பொங்கல் ரேசில் இறங்கும் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் வெளியீடாக வரும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்மஸ்,vijay sethupathi katrina kaif in merry christmas movie gets pongal release | Galatta

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ஹிந்தி படமான மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. வருகிற 2024 ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக வருகிற டிசம்பர் 15ஆம் தேதி மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வகையில் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் இதோ... 

 

KATRINA KAIF - VIJAY SETHUPATHI: ‘MERRY CHRISTMAS’ TO NOW ARRIVE ON 12 JAN 2024... 12 Jan 2024 is the new release date of #MerryChristmas, which teams #KatrinaKaif and #VijaySethupathi for the first time… #NewPosters

“We have made this film with a lot of love and passion,… pic.twitter.com/LTOdtORsFK

— taran adarsh (@taran_adarsh) November 16, 2023

விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் வெளியாகும் அதே பொங்கல் வெளியீடாக தமிழ் சினிமாவில் அசத்தலான படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உடன் இணைந்து கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்திய பொலிடிகல் ஸ்போர்ட்ஸ் படமான லால் சலாம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி பீரியட் ஆக்சன் திரில்லர் திரைப்படமான கேப்டன் மில்லர் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் கலக்கலான ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் ஆகிய திரைப்படங்கள் அதே பொங்கல் வெளியீடாக வெளிவர இருப்பதாய் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏஜென்ட் வினோத், பட்லாபூர், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் தான் மெர்ரி கிறிஸ்மஸ். ஹிந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகி வெளிவரும் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார் சஞ்சய் கபூர் வினை பட்டக் கிமு ஆனந்த் சண்முகராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். 

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விடுதலை பாகம் 1 படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி உடன் இணைந்து பெருமாள் வாத்தியார் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள விடுதலை பாகம் 2 திரைப்படம் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தனது 50வது திரைப்படமாக குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகும் மகாராஜா திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் சேதுபதி, இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கப்பட்டது. அடுத்ததாக தேசிய விருது பெற்ற "காக்கா முட்டை" இயக்குனர் மணிகண்டன் உடன் கடைசி விவசாயி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் மக்கள் செல்வன் புதிய தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும் நடித்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பிசாசு 2 படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.