தனக்கே உரித்தான பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த இயக்குனர் கௌதம் வாசுதே மேனன் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மெகா ஹிட் ஆனது. அடுத்ததாக ஏற்கனவே இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து நீண்ட காலமாக காத்திருக்கும் அதிரடி ஆக்ஷன் படமான துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளதாக தெரிகிறது. இதனிடையே நடிகராகவும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அடுத்ததாக தற்போது தளபதி விஜயின் 67வது படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் தங்கர் பச்சான் தனது கம்பேக் திரைப்படமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கதையின் நாயகனாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க, யோகி பாபு, அதிதிபாலன், மந்தமோகன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்திற்கு NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், லெனின் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இயக்குனர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் வருகிர செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் தான் ஏற்று நடித்த நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து பேசினார். அப்படி பேசுகையில்,

"இந்த படம் நான் பண்ணதுக்கு ஒத்துக்கிட்டதுக்கு இந்த ரெண்டு காரணங்கள் தான். முக்கியமாக பாரதிராஜா சார் கூட நடிக்கணும்னு தங்கர் பச்சன் சார் கதை சொன்னாரு. முதலில் என்னை நான் ஒரு நடிகனாக இதுவரைக்கும் இன்னும் நான் பார்க்கவில்லை.. நிறைய படங்கள் நடிப்பேனா என தெரியவில்லை. ஆனால் சாரிடம் NO சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கதை வந்து அப்படி இருந்தது. இந்த கதையை என்னுடைய ஆபீஸ்க்கு வந்து சொன்னார் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ரொம்ப எமோஷனலாக இருந்தது. அப்புறம் அவரோட படங்கள் எப்படி இருக்குன்னு எனக்கு தெரியும் ஆனால் என்னை தூண்டுனது வந்து இந்த படத்துல பாரதிராஜா சார் உடன் மகனாக என்ன நடிக்கணும்னு சொன்னார். அது ரொம்ப கஷ்டமா இருக்குமே, ஏன்னா சார் எப்படி நடிப்பாரு என்ன செய்வாரு அவருடைய படங்கள் எல்லாம் நான் பார்த்திருக்கேன் முக்கியமா திருச்சிற்றம்பலம் ரொம்ப பிடித்தது. அந்த கேரக்டரை கையாண்ட விதம் அதனால் கஷ்டமா இருக்கும் ஆனால் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நினைத்து தான் நான் உள்ளே இறங்கினேன்." என தெரிவித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்க் கீழ காணலாம்.