ராகவா லாரன்ஸின் துள்ளலான நடனத்தில் சந்திரமுகி 2 பட 2வது பாடல்... அசத்தலான மோருனியே லிரிக் வீடியோ இதோ!

ராகவா லாரன்ஸின் துள்ளலான நடனத்தில் சந்திரமுகி 2 பட 2வது பாடல்,raghava lawrence in chandramuki 2 movie moruniye song out now | Galatta

ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திலிருந்து 2வது பாடலாக மோருனியே பாடல் வெளியானது. நடன கலைஞராக சினிமாவுக்குள் நுழைந்து நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக மக்களை மகிழ்வித்து வரும் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் முக்கிய படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். கதையின் நாயகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைத்துள்ளாஏர். விறுவிறுப்பாக நடைபெற்ற சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறைவடைந்தது. 

அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஹாரர் காமெடி ஃபேமிலி என்டர்டெயன்ராக ட்ரீட்டாக வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளிவந்தது சந்திரமுகி திரைப்படத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட "ரா ரா" பாடலின் தெலுங்கில் ஸ்வாகதாஞ்சலி என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்தது இதனை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக மோருனியே என்ற பாடல் வெளிவந்திருக்கிறது. கவிஞர் விவேக் அவர்கள் எழுதி இருக்கும் இந்த பாடலை எஸ்பி.சரண் அவர்களும் ஹரிகா நாராயணன் அவர்களும் இணைந்து பாடி இருக்கின்றனர். பாபா பாஸ்கர் மாஸ்டரின் நடன இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களின் துள்ளலான நடனத்தில் உருவாகி இருக்கும் இந்த மோருனிய பாடலின் லிரிக் வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அசத்தலான அந்த பாடல் இதோ…