"நான் கேட்டேன் அவர் கொடுத்துட்டாரு!"- ஜெயிலர் நடிகர் ஜாஃபர் சாதிக்கிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு! வைரல் புகைப்படம் இதோ

ஜெயிலர் நடிகர் ஜாஃபர் சாதிக்கிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு | Galatta

ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர் ஜாஃபர் சாதிக்கிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்டகாசமான பரிசு ஒன்று கொடுத்துள்ளார். அன்றும் இன்றும் என்றும் என ஒட்டுமொத்த இந்திய திரை உலக ரசிகர்களும் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

கடைசியாக ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற தவறியது. அதேபோல் தனக்கென தனி பாணியில் பக்கா டார்க் காமெடி ஆக்ஷன் என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் ரீதியில் வெற்றி பெற்ற போதும் சில எதிர்மறை விமர்சனங்களின் காரணத்தினால் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த அத்தனை எதிர்மறை விமர்சனங்கள் & ட்ரோல்களுக்கு நடுவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது. 

ரிலீசான நான்கு நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே 105 கோடி வரை ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வசூலித்தது. முதல் வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிகபட்சமாக வசூலித்த படம் ஜெயிலர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரசிகர்கள் ரிப்பீட் மோட்டில் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாடி வருவதால் வரும் நாட்களில் இன்னும் பல வசூல் சாதனைகள் செய்து இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா திரைப்படத்தின் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகர் ஜாஃபர் சாதிக்கிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது சனிக்கிழமை பரிசாக வழங்கியிருக்கிறார். ஜெயிலர் படத்தின் முக்கியமான ஒரு சண்டைக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அணிந்திருந்த சன் கிளாஸை கொடுத்திருப்பதாக ஜாஃபர் சாதிக் தெரிவித்திருக்கிறார் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சன் கிளாஸின் புகைப்படத்தை பதிவிட்டு, "நான் கேட்டேன் அவர் கொடுத்துட்டாரு நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் ஜாஃபர் சாதிக் பதிவிட்ட அந்த பதிவு & புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 

View this post on Instagram

A post shared by J A F F E R S A D I Q (@jaffer__sadiq)