தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரபாஸின் கல்கி படக்குழுவினர் ஸ்பெஷல் பரிசாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பல கோடி ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாக திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் இன்று ஆகஸ்ட் 22ம் தேதி தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபாஸின் கல்கி படத்துல உணரும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அப்படி பெரும் எதிரபார்ப்போடு வெளிவந்த பிரபாஸின் சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தன. இந்த வரிசையில் கடைசியாக ராமாயண கதைக்களத்தைக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிரம்மாண்டமான ஆதிபுரூஷ் திரைப்படம், ரசிகர்களை திருப்தி படுத்துமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் ரீதியில் வரவேற்பை பெற்ற போதும் ரசிகர்களுக்கு ஆதிபுருஷ் திரைப்படமும் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் - பார்ட் 1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த சலார் படத்தின் டீசர் கேஜிஎஃப் பாணியிலேயே இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் அதே சமயத்தில் கலவையான விமர்சனங்களும் கிளம்பி இருக்கின்றன. இந்த சலார் படமாவது விமர்சன ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் பிரபாஸுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த வரிசையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் கல்கி 2898 AD. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பக்கா சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த கல்கி 2898 AD திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, முன்னணி கதாபாத்திரங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதாணி ஆகியோர் நடிக்கின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்திரி அவர்களின் பயோபிக் படமாக வெளிவந்த மகாநதி திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் நாக் அஸ்வின் கல்கி 2898 AD திரைப்படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் அவர்கள் கல்கி 2898 AD திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த கல்கி திரைப்படத்தின் டீசர் வீடியோ மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கல்கி திரைப்படத்தின் படத்தொகுப்பு நடைபெறும் டேபிளில் இருந்து சர்ப்ரைஸான சிறிய வீடியோ ஒன்றை கல்கி படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ட்ரெண்டாகும் அந்த புதிய வீடியோ இதோ…
Straight from the hearts and the editing room of #Kalki2898AD 👀
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) August 22, 2023
Here’s wishing our Megastar @KChiruTweets garu an extraordinary birthday!
Inspired by #ChiruLeaks 😉 pic.twitter.com/uFrJp8Rx9T