கடந்த வெள்ளி அன்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் தெலுங்கானா மட்டும் ஆந்திர பகுதிகளிலும் வெளியானது. கோலாகல கொண்டாட்டத்துடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களுக்கு பெரும் ஆதரவு அளித்து கொண்டாடி வருகின்றனர். நான்காவது நாளில் அடியெடுத்து வைத்திற்குக்கும் தனுஷ் நடித்த வாத்தி படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் தனுஷுடன் இனைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, கென் கருணாஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விமர்சனத்திலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்ற வாத்தி திரைப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பார்த்து விட்டு படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர், "என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கல்லை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஆச்சர்யத்தில் நின்றிருக்கிறேன். அப்படி ஒரு பயணத்தின் போது ஆச்சர்யத்தில் நின்ற இடம் தான் வாத்தி. இந்த படத்தில் நான் ஒரு சிறப்பு வேடத்தில் 2 காட்சிகளில் நடித்திருக்கிறேன். ஊடகங்கள் மக்களுக்கு பயணுள்ளதாக இருக்க வேண்டும்.‌ பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் மக்களுக்கும் சமூதாயத்திற்கும் பயணுள்ளதாய் இருக்க வேண்டும். அப்படிபட்ட படம் தான் வாத்தி. கல்வி இந்த சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை ஒரு வாத்தி வலியுறுத்தும் படம் இது. அதிலும் தனுஷ், என் மகன்‌ மாதிரி.. பொழுதுபோக்கிற்காக அவன் படம் பண்ணாலும் சமூகதாயத்திற்கு ஒரு பயணுடன் செய்திருக்கிறான். இப்பேற்பட்ட ஒரு புள்ள கிடைக்க திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும். மிகச்சிறந்த அறிவாளி. அவன் நடிகன் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளன். சிந்தனைபுலி..

இந்த படத்தில் சமுத்திரக்கனி நல்ல அற்புதமான வில்லன். எத்தனையோ முத்துக்கள் திரையுலகில் இருக்கின்றது அதில் ஒரு சிறந்த முத்து சமுத்திரக்கனி. சம்யுக்தா, ஒரு டீச்சர் இவ்வளவு அம்சமா இருக்காங்க.. டீச்சருக்கான அம்சம் அப்படியே சம்யுக்தாவிடம் உள்ளது. ஒரு அற்புதமான நடிகை. அளவான நடிப்பு, உடல் மொழி ஆகியவையை சிறப்பாக கையாண்டுள்ளார்.ஜிவி பிரகாஷ், அவன் நமக்கெல்லாம் பெரிய வரப்பிரசாதம். இந்த படம் மட்டுமல்ல. நான் சம்மந்தப்பட்ட இரண்டு மூன்று படங்களில் அவர் இசையமைத்துள்ளார். இந்த வருடத்தில் மிகச்சிறந்த இசையமைப்பிலும் நடிப்பிற்கும் தேசிய விருது ஜிவி பிரகாஷ் க்கு கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கை இருக்கு.

வாத்தியாரின் சமூக பொறுப்பு என்ன அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கும் வாத்தி திரைப்படம் நல்ல அருமையான திரைப்படம். இதில் நடித்த அத்தனை பேருமே அற்புதமாம செய்திருக்கிறார்கள். இப்போதுதான் படம் பார்த்தேன். மக்களுடைய கரகோஷம் காட்சிக்கு காட்சி அவர்கள் ரசித்த விதம்.. சமீபத்தில் வெளியானதில் சிறந்த படம் என்று சொல்லலாம். நான் நடித்தேன் என்பதற்காக அல்ல, பொதுவாகவே நல்ல படம் இது. வாத்தி ஒவ்வொருவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து மகிழ வேண்டிய படம்." என்றார்

தனுஷ் – பாரதி ராஜா இதற்கு முன்பு திருச்சிற்றம்பலம் படத்தில் இனைந்து நடித்துள்ளனர். நல்ல வரவேற்பை பெற்ற இந்த கூட்டணி மீண்டும் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்ததை ரசிகர்கள் ரசித்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.