மின்னல் முரளி கெட்டப்பில் அசத்தும் ஹிப் ஹாப் ஆதி.. வெளியானது 'வீரன்' படத்தின் First Look – அட்டகாசமான போஸ்டர் இதோ..

வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் புது பட போஸ்டர் -  Hip hop Tamizha Veeran movie poster | Galatta

குறுகிய காலத்தில் தன் திறமையினால் கவனம் பெற்று தனக்கென  தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. துவக்கத்தில் சுயாதீன இசை கலைஞராக அறிமுகமானவர். தன் பாடல்கள் மூலம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தார். பின் விஜய் ஆண்டனியின் இசையில் ‘நான் திரைப்படத்தில் சொல்லிசை பாடகராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். அதன் பின் அவ்வப்போது தமிழ் திரைத்துறையிலும் தனியாக சுயாதீன பாடல்களையும் உருவாக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. பின்  2015 ல் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலே ஆல்பம் ஹிட் கொடுத்து தமிழ் திரையுலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் ஆதி. அதன் பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைத்தார். 'இன்று நேற்று நாளை', 'கத்தி' சண்டை, 'கதக்களி', 'இமைக்கா நொடிகள்', 'தனி ஒருவன்', 'கோமாளி' என்று நிறைய படங்களுக்கு அட்டகாசமான ஆல்பம் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பளராக வளர்ந்தார். அதன் பின் அடுத்தகட்டமாக ஹிப் ஹாப் ஆதி இயக்குனராக ‘மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடித்து ஹிட் கொடுத்தார். ஹீரோவாக இயக்குனராக இசையமைப்பாளராக பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றார் ஹிப் ஹாப் தமிழா அதன் படி இதுவரை ஹீரோவாக ஐந்து படங்களில் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் ஆதி. தற்போது ஆதி ‘வீரன் , ‘பீ.டி சார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(இன்று பிறந்த நாள் காணும் திரைக்கலைஞர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கு கலாட்டா தமிழ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.)

இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளையொட்டி சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடித்து வரும் திரைப்படமான ‘வீரன் திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. மின்னல் முரளி கெட்டப் போல் ஹிப் ஹாப் ஆதி மின்னல் ஏந்தி நிற்பது போன்ற அட்டகாசமான போஸ்டர் ரசிகர் அனைவரையும் கவர்ந்துள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சம் படமாக வீரன் படம் இருக்கக் கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் போஸ்டரை பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

music director s thaman confirms balakrishna blockbuster film akhanda sequel

மரகத நாணயம் பட புகழ் இயக்குனர் ARK சரவணன் இயக்கும் இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவார் தீபக் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். அட்டகாசமான போஸ்டருடன் எதிர்பார்ப்பை எகிர வைத்த வீரன் திரைப்படம் வரும் கோடை நாட்களையொட்டி திரையரங்குகளுக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் நாட்களில் வீரன் படத்தின் அப்டேட்டுகள் வரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Here is the Super cool #VeeranFirstLook ft. @hiphoptamizha in a different avatar ⚡🎉 #Veeran In Theatres Summer 2023 🥁@ArkSaravan_Dir @editor_prasanna @deepakdmenon @kaaliactor @SassiSelvaraj @MaheshMathewMMS pic.twitter.com/qbIYC79Wb8

— Sathya Jyothi Films (@SathyaJyothi) February 20, 2023

பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்.. திடீரென சூழ்ந்த ரசிகர்கள்.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்.. திடீரென சூழ்ந்த ரசிகர்கள்.. - வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

“Adjust பண்ணாமலா நீ முன்னணி நடிகை ஆகிருப்ப?” - விமர்சனத்திற்கு விளக்கமளித்த நடிகை சர்மிளா.. முழு வீடியோ இதோ
சினிமா

“Adjust பண்ணாமலா நீ முன்னணி நடிகை ஆகிருப்ப?” - விமர்சனத்திற்கு விளக்கமளித்த நடிகை சர்மிளா.. முழு வீடியோ இதோ

வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் நிலவரம் என்ன? - தயாரிப்பாளர் கொடுத்த Ground Report இதோ..
சினிமா

வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் நிலவரம் என்ன? - தயாரிப்பாளர் கொடுத்த Ground Report இதோ..