இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் அசுரத்தனமான நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கும் தங்கலான் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் சீயான் விக்ரம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட தங்கலான் டீசர் வெளியீட்டு விழா இன்று நவம்பர் 1ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 11:30 மணி அளவில் இந்த மிரட்டலான தங்கலான் டீசரை பட குழுவினர் வெளியிட்டனர். பார்த்தவுடன் அனைவரையும் அந்த உலகத்திற்குள் இழுத்துச் செல்லும் வகையில் மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் வெளிவந்திருக்கும் இந்த தங்கலான் டீசர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் ஆரம்பிக்கும் முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை தனது மிருகத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார் சீயான் விக்ரம்.

முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் சீயான் விக்ரம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில் முதல் முதலில் வெளிவந்த தங்கலான் அறிவிப்பு ப்ரோமோ அனைவரையும் பிரமிக்க வைத்தது. 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படத்தில் சீயான் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் உடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று முழுவீச்சில் வருகின்றன. இதுவரையில் இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய படமாக மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட ஒரு எமோஷனல் பீரியட் ஆக்சன் திரில்லர் படமாக தங்கலான் திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய விஷுவல் ட்ரீட்டாக வர இருக்கிறது. இந்திய சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தை PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக தங்கலான் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கார் உட்பட 9 சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் கொண்டு சேர்க்கவும் பட குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்த மிரட்டலான தங்கலான் டீசர் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. அந்த அட்டகாசமான தங்கலான் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.