லியோ வெற்றி விழா: தளபதி விஜயின் குட்டி ஸ்டோரிக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த பிளடி ஸ்வீட் அறிவிப்பு!

தளபதி விஜய்யின் லியோ பட வெற்றி விழா குறித்த அறிவிப்பு வெளியீடு,thalapathy vijay in leo success meet announcement | Galatta

ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த லியோ வெற்றி விழா குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. நாளை நவம்பர் 1ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் தளபதி விஜயின் லியோ பட வெற்றி விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த அட்டகாசமான அறிவிப்பு குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தளபதியோட குட்டி ஸ்டோரி இல்லாம எப்படி நண்பா லியோ SORRY மொத்த குடும்பம் மற்றும் குழுவினர் உங்களுக்காக வருகின்றனர். TheRoarOfLeo - Bloody Sweet Victory நாளை (நவம்பர் 1ம் தேதி) PS : இந்தவாட்டி மிஸ் ஆகாது" என பதிவிட்டு இந்த மாஸ் அறிவிப்பிற்கான பக்கா மாஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதுவரை இந்திய சினிமா பார்த்திடாத மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த லியோ திரைப்படம் உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் விமர்சன ரீதியாக பல கலமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ரிலீசான முதல் நாளிலேயே 148.75 கோடி ரூபாய் வசூலித்து இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சம் தொட்ட லியோ திரைப்படம் தொடர்ந்து முதல் வாரத்தில் 461 கோடிக்கும் மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் வரலாற்று சாதனையை பதிவு செய்தது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் 12 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 540 என படக் குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதே மாதிரியாக லியோ திரைப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் உச்சகட்ட வசூல் சாதனையை எட்டும் எனவும் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் வியக்க வைக்கும் ரெக்கார்டை பதிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சில பாதுகாப்பு காரணங்களுக்காக நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. ஒவ்வொரு படத்திற்கும் தளபதி விஜய் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை சந்திப்பதும் இசை வெளியீட்டு விழாக்களில் முக்கிய அம்சமாக இருக்கும் தளபதி விஜயின் குட்டி ஸ்டோரியும் லியோ திரைப்படத்தில் மிஸ் ஆனது. இந்த நிலையில் ரசிகர்களின் மகிழ்ச்சியை மனதில் கொண்டு லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்த படக்குழுவினர் அதற்கான முழு அனுமதியையும் பெற்று தற்போது அதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். நாளை நடைபெறவிருக்கும் லியோ பட வெற்றி விழாவில் தளபதி விஜய் உடன் இணைந்து லியோ பட குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் சிறப்பு விருந்தினர்களாக நட்சத்திரங்கள் யாரேனும் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பும் இந்த வெற்றி விழாவில் தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி என்ன என்ற எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை அறிவிக்கும் வகையில் படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ…
 

#Thalapathy oda kutty story illama epdi nanbaa 🎙️🎤#Leo🙊sry parthiban's moththa family & crew is coming for you all ❤️#TheRoarOfLeo - Bloody sweet Victory 🦁

Tomorrow 🔥

P.S. Intha vaati miss aagaathu👍#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrasherspic.twitter.com/KESdWKvHOv

— Seven Screen Studio (@7screenstudio) October 31, 2023