அன்னபூரணி: ரசிகர்களுக்கு செம்ம விருந்து வைக்க காத்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நயன்தாராவின் அன்னபூரணி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,nayanthara in 75th movie annapoorani release date announcement | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை நயன்தாரா தனது திரை பயணத்தில் 75வது திரைப்படமாக நடித்திருக்கும் அன்னப்பூரணி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி அன்னபூரணி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் இந்த அன்னப்பூரணி திரைப்படத்தில் நடிகை ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், அச்சுத் குமார், குமாரி சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கைதி & மாஸ்டர் படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் அன்னப்பூரணி திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். நயன்தாராவின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமான படைப்பாக  உருவாகி இருக்கும் அன்னப்பூரணி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக முதன்முறை ஹிந்தி சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை நயன்தாரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த 2023 ஆம் ஆண்டில் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்த ஜவான் மற்றும் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வித்தியாசமான சைக்கோ சீரியல் கில்லர் படமாக வெளிவந்த இறைவன் ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு நடிகை நயன்தாரா நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக தற்போது தமிழில் டெஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் அவர்கள் முதன்முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் மண்ணாங்கட்டி Since 1960 எனும் திரைப்படத்திலும் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இது போக மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இயக்குனரான இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் பார்ட் 2 படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரசிகர்களுக்கு செம்ம விருந்து வைக்க காத்திருக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளி வருகிறது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த அன்னபூரணி திரைப்படத்தின் முதல் GLIMPSE ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெகு விரைவில் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவின் அன்னபூரணி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ...
 

#Annapoorani is bringing you a feast and will see you in theatres on the 1st of December. Get ready!#Nayanthara #N75 @Actor_Jai @Nilesh_Krishnaa @zeestudiossouth @tridentartsoffl @NaadSstudios #Ravindran @Naadsstudios @SETHIJATIN @kejriwalakshay @sanjayragh pic.twitter.com/xp91pZkrAi

— Trident Arts (@tridentartsoffl) October 31, 2023