உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கும் என்றும், தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என்றும் அமேசான் சி.இ.ஓ. ஆண்ட்டி ஜெஸ்சி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.

மேலும் இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வந்த நிலையில் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கும் என்றும், தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என்றும் அமேசான் சி.இ.ஓ. ஆண்ட்டி ஜெஸ்சி தெரிவித்துள்ளார். இந்த சூழலில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரானது 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனை உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இதனிடையே ரஷிய தாக்குதலால் கடுமையான பொருளாதார இழப்புகளையும் எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. ஆயுத உதவி, நிதி உதவியையும் அளித்து வருகின்றது. இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நன்கொடைகள், இணைய பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமேசான் சி.இ.ஓ. ஆண்ட்டி ஜெஸ்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “உக்ரைன் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது. தொடர்ந்து உதவி செய்யும்.

அமேசான் மற்றும் எங்கள் ஊழியர்களிடமிருந்து பண நன்கொடைகள், தேவைப்படுபவர்களுக்கு பொருட்களைப் பெறுவதற்கான உபகரணங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு தேவையான இணைய பாதுகாப்பு உதவி ஆகியவற்றின் மூலம் தரையில் உள்ள மனிதாபிமான அரசு சாரா நிவாரண அமைப்புகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று அதில் ஆண்ட்டி ஜெஸ்சி பதிவிட்டுள்ளார்.