டிக் டாக்கில் கிளுகிளுப்பான பாடல்களுக்குக் கவர்ச்சியாக நடனம் ஆடிய சுகந்தியை, ஊர்மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்பங்கள் வளரும்போது, அந்த தலைமுறை மக்களும் சில மாற்றங்களைச் சந்திப்பது இயல்புதான். அதற்கு உதாரணமாக, டி.வி. செல்போன், இணைய தளத்தைக் குறை சொல்லி வந்த நிலையில், இது எல்லாவற்றையும் விட, தற்போது டிக்டாக்கில் வெளியிடப்படும் வீடியோவால் ஏற்படும் விபரீதங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் அதி பயங்கரமாக இருக்கிறது.

தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை சுகந்தி, டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

அதற்குக் காரணம், டிக்டாக்கில் அவர் காட்டும் கவர்ச்சியும், அவர் போடும் ஆட்டமும் தான் காரணம்.

தொடக்கத்தில் இயல்பாகப் பாடியும், நடித்தும் வீடியோ வெளியிட்டு வந்த சுகந்தி, தனது சினிமா கனவை இந்த டிக்டாக் மூலம் பிடிக்க நினைத்து, முழுக்க முழுக்க முக்கல் முனகல் பாடல்களுக்கு, அதே போல்.. முக்கி முக்கி நடித்து ஆட்டம் போட்டுள்ளார். அத்துடன், தனது ஆடைகளை சினிமாவில் வருவதுபோல் படு கவர்ச்சியாக அணிந்துகொண்டு, நடனமாடி பார்ப்பவர்களை கிரங்கடிக்கச் செய்தார்.

இது குறித்து, ஒரு இளைஞர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அத்துடன், சுகந்தி வாழும் கிராமத்து பெண்கள் குறித்தும், அந்த இளைஞர் தவறாகச் சித்தரித்து விமர்சனம் செய்திருந்தார். இதனால், ஊர்மக்களின் கோபம் சுகந்தி மீது பாய்ந்தது.

அப்போது, சுகந்தி பேருந்தில் பயணம் செய்வதற்காக ஏறி உள்ளார். அந்த நேரத்தில் பேருந்திலிருந்த ஊர்மக்கள், சுகந்தியை கடுமையாகத் தாக்கி, “இனி ஊர் பக்கம் வரக்கூடாது” என்று கூறி விரட்டி அடித்துள்ளனர்.

அத்துடன், அங்குள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, “சுகந்தியால் தங்கள் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுகந்தியை ஊருக்குள் விட்டால் மிகப் பெரிய பிரச்சனை ஏற்படும்” என்றும் புகார் அளித்தனர்.

இது தொடர்பான மனுவைப் பெற்றுக்கொண்ட போலீசார், நாகலாபுரம் கிராம பெண்களை விமர்சனம் செய்தவனை கைது செய்வதாக உறுதி அளித்தனர். அத்துடன், சுகந்தியை அழைத்து விசாரிப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து, கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், நாகலாபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.