காதல் என்ற பெயரில் 17 வயது சிறுமியை 39 வயது ஆண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 39 வயதான  கலாதரனுக்கு, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.

17 yo girl sexually assaulted in Tiruppur

கேரளாவிலிருந்து குடும்பத்துடன் திருப்பூருக்கு வேலைக்கு வந்த கலாதரன், அங்குத் தனியாக வீடு எடுத்துத் தங்கி உள்ளார்.

இதனிடையே, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், கோபமடைந்த அவரது மனைவி, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, மீண்டும் கேரளாவிற்கே சென்றுவிட்டார்.

17 yo girl sexually assaulted in Tiruppur

இதனையடுத்து, தனியாக வீடு எடுத்துத் தங்கிய கலாதரன், அந்த பகுதியில் வசித்து வந்த 17 வயது பெண்ணுடன் நட்பாக அறிமுகமாகி உள்ளார்.

நாளடைவில், அவர் மனசை காதல் என்ற பெயரில் கலைத்து, அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவரை அங்கிருந்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில், மகளைக் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கலாதரன் மீது சந்தேகப்பட்டு, அவரது செல்போனை வைத்து, அவரை கண்டுபிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.