மீண்டும் மற்றொரு சீரியல் நடிகையின் கள்ளக்காதல் விவகாரம் தெருவுக்கு வந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சரத்குமார் நடித்த “மாயி” படத்தில் வரும் “வாமா மின்னல்” வடிவேல் காமெடி காட்சியை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது.

actress Minnal deepa affair with husband friend

அந்த காமெடி காட்சியில் நடித்த நடிகை தான் தீபா. “மாயி” படத்திற்குப் பிறகு, மின்னல் தீபா என்ற பெயரோடு தான் அனைவரும் அழைக்கத் தொடங்கினர். தற்போது, இவருடைய ரகசிய காதல் விவகாரம்தான் தற்போது தெருவுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த மின்னல் தீபா, தற்போது “யாராடி நீ மோகினி” சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலின் படப்பிடிப்பின்போது, அந்த நடிகை நடித்துக்கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென்று சூட்டிங் ஸ்பாட்டில் அத்துமீறி நுழைந்த ஒருவர், மின்னல் தீபாவை கண்மூடித்தனமாகத் தாக்கி விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர், இது தொடர்பாக விளக்கம் அளித்த மின்னல் தீபா, “குடும்ப பிரச்சனை காரணமாக, தன் கணவருடன் பிரிந்து வாழ்வதாகவும், அதைப் பயன்படுத்தி எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் என்னை இதுபோன்று டார்ச்சர் செய்கிறார்” என்று கண் கலங்கி கூறியுள்ளார்.

actress Minnal deepa affair with husband friend

இதனிடையே, மின்னல் தீபாவை சூட்டிங் ஸ்பாட்டில் வந்து தாக்கியது சிட்டி பாபு என்பது தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாகக் கருத்து கூறிய அவர், “நானும் தீபாவும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், நான் என் சக நண்பர்களுடன் பழகுவது பிடிக்காமல், அவள் என்னை டார்ச்சர் செய்ததால், நான் அவரிடமிருந்து விலகிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி, என்னைத் தொடர்ந்து டார்ச்சர் செய்தார். அதனால் தான், சூட்டிங் ஸ்பாட்டில் வந்து அவரை தாக்கினேன்” என்று விளக்கம் அளித்து, அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

actress Minnal deepa affair with husband friend

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், சீரியல் நடிகர் ஈஸ்வர் - மகாலட்சுமி கள்ளக்காதல் விவகாரம் தெருவுக்கு வந்து சந்தி சிரித்தது. தற்போது, மீண்டும் ஒரு சீரியல் நடிகையின் கள்ளக் காதல் விவகாரம் தெருவுக்கு வந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.