காதலர் தினமான இன்று, காதலில் தோற்றவர்களுக்காக பிரேக் அப் பார் தொடங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளைஞர்கள், தங்கள் காதலிக்கும், காதலனுக்கும் ரோஜா பூ உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களைப் பரிசாகத் தந்து அசத்தி வருகின்றனர்.

valentines day 2020 breakup bar opened in america

முக்கியமாக, இதுவரை சிங்கிளாக இருந்தவர்கள், இன்று முதன் முதலாக தனக்குப் பிடித்தவர்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காதலர் தினமான இன்று, வித்தியாசமான முறையில், காதலில் தோற்றவர்களுக்காக அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில், பிரேக் அப் பார் தொடங்கப்பட்டுள்ளது.

valentines day 2020 breakup bar opened in america

இன்று காதலர் தினம் என்பதால், பல காதலர்கள் தங்களது ஜோடியுடன் சந்தோசமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், காதலில் தோற்றவர்களுக்காக பிரேக் அப் பார் தொடங்கப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

valentines day 2020 breakup bar opened in america

இதனிடையே, இன்று காதலர் தினம் என்பதை தாண்டி, காதலில் தோற்றுப்போன ஆண்களும் பெண்களும் அதிகமான அளவில் வருகை தந்து, காதலில் தோற்றத்தைக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன், இன்று ஒரே நாளில் பல ஆயிரம் டாலர் மதிப்பிலான மது விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.