“காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பவர்கள் கொரோனா சந்தேகத்திற்குரியவர்களே” என்று, புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலைக்குப் பிறகு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களா கொரோனா தொற்றின் வேகம் சற்றும் வேகம் எடுத்துள்ளதாகவும் மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

அதுவும், கடந்த 29 ஆம் தேதி 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், அடுத்த நாளே இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென 13,154 ஆக உயர்ந்து போனது. இது மட்டுமில்லாமல், இந்த கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கையானது நேற்று 16,764 ஆக பதிவாகி இன்னும் அதிகரித்தது, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், அதுவும் 10 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையானது 10 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி, நேற்று 15 ஆயிரத்தையும் கடந்து பதிவானது. இந்த நிலையில், இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 20 ஆயிரம் கடந்து உள்ளது.

இந்த சூழலில் தான், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த கடிதத்தில், “கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு உள்ளது” என்று, சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பரிசோதித்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்துவது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முக்கியமானது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சு திணறல், உடல் வலி, சுவை தெரியாமல் இருத்தல், வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் நபர் அல்லது காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் இல்லாமலேயே இருந்தாலும் அவர்கள் அனைவரும் கொரோனா சந்தேகத்திற்குரியவர்களாக கருதி, அவர்களை உடனே தனிமைப்படுத்த வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வரவதற்கு 5 முதல் 8 மணி நேரம் ஆகும் என்பதால், கொரோனா நோய் தொற்றை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாலும், ஆன்டிஜென் சோதனைகளை ஆர்.ஒ.டி. அதிகரிக்க வேண்டும்” என்றும், அவர் வற்புறுத்தி உள்ளார்.

“கடந்த 24 மணி நேர அடிப்படையில் பல ஆர்.ஏ.டி. சோதனை மையங்களை அமைக்கவும், அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.ஏ.டி. சோதனையை அனுமதிக்க வேண்டும் என்றும், தேவையான பரிசோதனை உபகரணங்களை வாங்குவதை விரைவுபடுத்த வேண்டும்” என்றும், அவர் மாநில அரசுகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.