சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 5 ஆக அதிகரித்து உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்து உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் 42 வயதான முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.

இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து 2 வருடம் ஆகும் நிலையில், இந்த பட்டாசு தொழிற்சாலையில் 100 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர் .

இங்கு, புத்தாண்டு தினமான இன்றைய தினம், இந்த பட்டாசு ஆலையும் வழக்கம் போல் செயல்பட்டு உள்ளன. அப்போது, இந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல்? தொழிலாளர்கள் தங்களது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. ஆலையில் வெடி மருந்தை செலுத்தும் போது, ஏற்பட்ட உராய்வின் காரணமாக, இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வெடி விபத்து ஏற்பட்ட கெமிக்கல் கலக்கும் கட்டிடத்தில் மொத்தம் 7 ஏழு அறைகள் இருந்த நிலையில், அங்கு 20 பேர் பணியாற்றி வந்தனர். ஆனால், திடீரென்று ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது.

அதன் தொடர்ச்சியாக, அருகில் இருந்த அறைகளில் இருந்து வேலை பார்த்தவர்கள் தப்பித்து 4 பக்கமும் சிதறி ஓடிய நிலையில், அங்கு தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது.

அத்துடன், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்து வந்து அதிவேகமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் வத்திராயிருப்பு எரிச்சநத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறை வாகனங்களும் விரைந்து வந்து தீயை அணைத்தன. 

எனினும், இந்த மீட்பு பணியின் போது முதலில் 4  பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 8 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவரும் தற்போது உயிரிழந்து உள்ளார்.

இதனால், பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 5 பேராக உயிர்ந்து உள்ளது. தற்போது 8 பேர் படுகாயமடைந்து தீவிரமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால், அப்பகுதியில் புத்தாண்டு தினமான இன்று, பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.