நிர்பயா குற்றவாளி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தொடர்ந்து தப்பித்து வருகின்றனர். இதனால், குற்றவாளிகள் அனைவருக்கும், 2 வது முறையாகத் தூக்குத் தண்டனை தேதி, நேரம் எல்லாம் அறிவிக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து 2 வது முறையாகத் தூக்குத் தண்டனையைத் தடைப்பட்டுள்ளது.

இதனிடையே, குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, மீண்டும் நீதிமன்றத்தில் குற்றவாளி வினய் சர்மா, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடல் மற்றும் மனதளவில் குற்றவாளி அனைவரும் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தது. இதனையடுத்து, குற்றவாளி வினய் சர்மாவின்
மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அதன்படி, குற்றவாளிகள் அனைவரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.