உல்லாசத்தின் போது பணம் கேட்ட 30 வயது பெண்ணை, 17 வயது சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தில் உள்ள தெற்கு ரயில்வே குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஆனால், அவற்றில் பல வீடுகள் முறையாக பராமரிக்கப்படாமல், பல வீடுகள் பாழடைந்து காணப்படுகின்றன.

Teenager kills woman for asking money during sex

இந்நிலையில், விழுப்புரம் ரயில் நிலைய கேண்டீனில் வேலை செய்யும் 17 வயது சிறுவன், அங்குள்ள பிளாட்பாராத்தில் பிச்சை எடுக்கும் 30 வயது பெண் ஒருவரை பாலியல் ரீதியாக அணுகி உள்ளார்.

அந்த பெண்ணும், அந்த சிறுவனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதம் தெரிவிக்கவே, அருகில் உள்ள தெற்கு ரயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

பின்னர், இருவரும் ஆடைகளைக் கலைத்த நிலையில், உல்லாசம் அனுபவிக்கும் முன்பு, தனக்குத் தரவேண்டிய பணத்தை இப்போதே தர வேண்டும் என்று, அந்த பெண் வற்புறுத்தி உள்ளார்.

அந்த சிறுவனும், தன்னிடமிருந்த 50 ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால், இது போதாது என்றும், தனக்கு 500 ரூபாய் வேண்டும் என்றும் அந்த பெண் கூறவே, தன்னிடம் பணம் இல்லை என்று, சிறுவன் கூறியுள்ளான்.

பணம் இல்லை என்றால், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து உள்ளே தள்ளவிடுவேன் என்று, அந்த பெண் மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்துபோன சிறுவன் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து, அந்த பெண்ணின் முகத்தில் போட்டு கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ரயில் நிலையப் பகுதியில் சுற்றித் திரிபவர்களை விசாரித்துள்ளனர். அப்போது, பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன் சிக்கி உள்ளான். இதனையடுத்து, அவனைக் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Teenager kills woman for asking money during sex

இதனிடையே, உல்லாசத்தின் போது பணம் கேட்ட 30 வயது பெண்ணை, 17 வயது சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம், விழுப்புரம் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.