மனைவியை நடுரோட்டில் இழுத்துப் போட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் தார் என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நரேந்திர சூர்யவன்ஷி என்பவர் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

Police officer beats wife in public in MP India

இதனிடையே, போலீஸ் அதிகாரி நரேந்திர சூர்யவன்ஷி என்பவருக்கும், அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணும் இடையே தகாத உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த அதிகாரி வீட்டிற்குச் செல்வதையே தவிர்ந்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனால், கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்த அந்த அதிகாரியின் மனைவி, அவரை தேடி காவல் நிலையம் வந்துள்ளார்.

அப்போது, அந்த அதிகாரி சக அதிகாரிகளுடன் ரோட்டில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது மனைவி, கள்ளக் காதல் விவகாரம் குறித்து, கணவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், கடும் கோபமடைந்த அந்த அதிகாரி, பட்டப்பகலில் நடுரோட்டில் எல்லோர் முன்பும், மனைவியைக் கண்மூடித்தனமாகத் தாக்கினார். இதனையடுத்து, அந்த அதிகாரியுடன் அங்கு நின்றுகொண்டிருந்த சக போலீசார், அவரை விலக்கி விட்டு, அவரது மனைவியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த காட்சியை, அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்களில் சிலர், தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இதில், ஒருவர் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, காவல் உயர் அதிகாரி, தன் மனைவியை நடுரோட்டில் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.