கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் மையம் கொண்டு கடுமையாகத் தாக்கி வருகிறது. இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு மாதிரியாக நோயாளிகளிடமிருந்து கண்டனம் வசூல் செய்தது.

இது தொடர்பா மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்த தமிழக அரசு, அந்த குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்து, கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்று லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனிடையே, மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.