கேரளாவில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

“ 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்!' - யார் சொன்னது? அப்படியென்றால், திருமண வாழ்க்கையில் ஏன் இத்தனை கோடி இடியப்ப சிக்கல்கள்? பலரின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியும் ஓர் அற்ப நிகழ்வு தான் திருமணம்!” என்று, இவ்வுலகின் கால மாற்றத்தில் இப்பொழுது மாறியிருக்கிறது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மனித மனம் மறுக்கிறது.

Man gangrapes wife with his friends

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணிற்கு, தன் கணவனாலேயே நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவியையும், தன்னுடைய 2 ஆண் பிள்ளைகளையும், அங்குள்ள புதுக்குறிச்சி கடற்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் செல்வதாகக் கூறி, அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த குறிப்பிட்ட வீட்டிற்குள் சென்றதும், அங்கு கணவரின் 4 நண்பர்கள் இருந்துள்ளனர். இதனால், சற்று யோசித்து சந்தேகமடைந்த மனைவியை, அதற்குள் கட்டாயப்படுத்தி, கணவனே தன் மனைவியின் வாயில் மதுவை ஊற்றி கடுமையான போதைக்குத் தள்ளி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அந்த பெண்ணின் 5 வயது மூத்த மகனை அடித்துத் துன்புறுத்தி; அந்த மகன் முன்பே, அந்த பெண்ணை கணவன் உட்பட அவனது 4 நண்பர்களும் சேர்ந்து பாலியல் இச்சைக்கு, அந்த அற்ப சுகத்திற்குக் கட்டாயப்படுத்தித் துன்புறுத்தி உள்ளனர். 

Man gangrapes wife with his friends

கடும் போதையிலும், அவர்களின் காம இச்சைக்கு இணங்க மறுத்த அந்த பெண்ணையும் அடித்து துன்புறுத்தியோடு, அந்த பெண் வீம்பு பிடிக்கும்போதெல்லாம் அந்த பெண்ணின் 5 வயது மகனை மாறி மாறி அடித்துத் துன்புறுத்தி, அந்த பெண்ணை தங்களது காம இச்சைக்கு இணங்கச் செய்துள்ளனர், அந்த கல் நெஞ்சம் படைத்த காம அரக்கர்கள். 

மேலும், அந்த பெண் தனது நண்பர்களுடன் பாலியல் இச்சை கொள்ளவில்லை என்பதற்காக, கணவனே அந்த பெண்ணை சிகரெட் நெருப்பால் பல இடங்களிலும் சுட்டு கடுமையாகக் காயப்படுத்தி உள்ளார்.

இப்படி அரக்கத்தனமாக நடந்துகொண்டு அந்த பெண்ணின் 5 வயது மகன் முன்பே, அந்த பெண்ணை கணவன் உட்பட 5 பேரும் சேர்ந்து மாறி மாறி கதறக் கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அனைத்து இச்சைகளின் இம்சைகளையும் பொறுத்துக்கொண்ட அந்த பெண், பலியைத் தாங்க கொள்ள முடியாமல் அந்த 5 காம வெறியர்களிடமிருந்து எப்படியோ போராடி, அங்கிருந்து தப்பி, மெயின் ரோட்டிற்கு ஓடிவந்துள்ளார். அந்த வழியாகச் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

Man gangrapes wife with his friends

அப்போது, அந்த வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர், அந்த பெண்ணை மீட்டு, அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

அங்கு, தன் கணவனால் தனக்கு நேர்ந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம் குறித்து புகார் அளித்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, கணவன் உட்பட அவனது மற்ற 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் என்னும் ஒரு மாட்டுவண்டியில் இரண்டு சக்கரங்கள் இல்லாமல் வண்டிகள் ஓடத் தொடங்கிவிட்டன. 

இந்த பயணத்தில் எப்போதும்.. எதுவும் நடக்கலாம். காரணம், திருமணம் ஓர் எச்சரிக்கை பயணம்!