உடலுறவின் போது தம்பதிகள் முகமூடி அணிய வேண்டும் என்று, புதிய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா பீதியால், உலகம் முழுமைக்கும் கை கொடுத்து, கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தும் மேல்நாட்டுக் கலாச்சார பழக்கம் வழக்கமெல்லாம் மறைந்து, மறந்து மனிதர்களுக்குள் சமூக இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால், மேல்நாட்டினர் அனைவரும் தமிழக கலாச்சாரப்படி கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்லும் அளவுக்கு பழகத் தொடங்கி உள்ளனர். 

Research says face masks necessary during sex

மேலும், கொரோனா தாக்கம் காரணமாக, உலக மக்கள் அனைவரும் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை அலுவலகம், வெளி உலகம் என்று ஊர் சுற்றிய ஆண்கள் எல்லாம், ஊரடங்கு உத்தரவால், பொட்டி பாம்பாக வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

இதனால், வீட்டில் உள்ள கணவன் - மனைவி இடையே ரொமன்ஸ் அதிகரித்து அவர்களுக்குள் உடலுறவு இன்பங்களும் அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா மாஸ்க் விற்பனைக்கு இணையாக, ஆணுறை விற்பனையும் உலகம் முழுவதும் உச்சத்தைத் தொட்டு வருகிறது. 

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், தம்பதிகள் உடலுறவில் ஈடுபடுவது குறித்து, ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர். 

அந்த ஆய்வின் முடிவில், “உடலுறவின் போது தம்பதிகள் முகமூடி அணிய வேண்டும் வலியுறுத்தி” கேட்டுக்கொண்டுள்ளனர்.  

Research says face masks necessary during sex

மேலும், “உடலுறவின்போது ஒரு துணையிடமிருந்து மற்றொரு துணைக்கு எளிதில் கொரோனா வைரஸ் பரவும்” என்றும், ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேபோல், “மனிதன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் உச்சக்கட்ட இன்பத்தை எட்டும்போது, அவன் தன்னையும் மீறி செயல்படுவதாகவும், இதனால் ஆபத்தான பாலியல் சூழ்நிலை அங்கு உருவாகும் சூழல் இருப்பதாகவும்” ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், “கொரோனா அறிகுறி மற்றும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் என்றும், அவர்களிடமிருந்து முத்தம் உள்ளிட்ட அன்பின் ஆதாயம் எதையும் பெற வேண்டாம்” என்றும் வலியுறுத்தி உள்ளனர்.  

குறிப்பாக, “பாலியல் இன்பத்தின்போது தம்பதிகள் கட்டாய் மாஸ்க் அணிய வேண்டும் என்றும்” ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Research says face masks necessary during sex

மேலும், “ உங்கள் பகுதியில் கொரோனா நோயாளிகள் இருந்தால், முகமூடியைத் தொடர்ந்து அணிய வேண்டும் என்றும், முத்தமிடுவதையும், வாய்வழி இன்ப செயல்கள் மற்றும் விந்து வெளியேற்றுதல் என இப்படியான எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்” என்றும், ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் எல்லாவித பாதுகாப்பான முறையில் உடலுறவில் ஈடுபட்டாலும், உடலுறவிற்கு முன்பும் பின்பும், கிருமி நாசினி மற்றும் சோப்புடன் அனைத்து பாகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்” என்றும், ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.