உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் அதி தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக மக்கள் அனைவரையும் உயிர் பயத்தில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதனால். உலக அளவில், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

குறிப்பாக, இந்த பலி எண்ணிக்கையில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இத்தாலியில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது. ஸ்பெயினில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் சுமார் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.88 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,883 ஆக உள்ளது.

இதனால், உலக முழுவதும் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை தற்போது 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மிகச் சரியாக கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 42,130 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல், உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8.57 லட்சத்தைத் தாண்டி உள்ளது. அத்துடன், சுமார் 1,77 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை மீண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.