இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

 Corona death count 34 in India

மேலும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா பரவலில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ள நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 3 வது கட்டத்திற்குச் சென்றுவிட்டதாக நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்தன. இந்த 4 வது நிலை என்பது, கொரோனா வைரஸ் தாக்கத்தின் உச்சபட்சமான நிலையாகும்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல், இன்னும் 3 கட்டத்திற்குச் செல்லவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும், “இந்தியாவைப் பொருத்தவரை, கொரோனா தாக்கம் இன்னும் உள்ளூர் அளவில் மட்டுமே உள்ளதாகவும்” மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3.19 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 Corona death count 34 in India

இதனிடையே, டெல்லியில் புதிதாக மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மகாராஷ்டிராவில் மேலும் 5 பேர் பாதிப்பு. அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 225 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் மேற்குவங்கத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு. அம்மாநிலத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தாக்குதலுக்கு கேரளாவில் 2 வது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது. 

 Corona death count 34 in India

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், “மார்ச் 13, 15 தேதிகளில் டெல்லியில் உள்ள நிசாமாபாத் பகுதியில் நடைபெற்ற மத சார்ந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது என்றும், இந்த கூட்டத்தில் பங்கெடுத்த தெலங்கானாவை சேர்ந்த 6 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர்" என்றும் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் தெரிவித்தார். 

அத்துடன், தெலங்கானாவில்  6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 13 பேர் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 61 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இக்கட்டான தருணத்தில் இருந்து மீண்டு வருவோம் என்று கேரள அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.