கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மெல்ல பரவி வந்த நிலையில், தற்போது அது சற்று வீரியம் எடுத்துள்ளது. இதனால், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். முதலமைச்சர் பழனிசாமி உடன் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி ஆகியோரும் உடன் சென்றனர்.

TN Chief Minister Palanisamy meets Governor

ஆளுநருடனான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற நிலையில், கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தனர். அதேபோல், தமிழகத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்கள் பற்றிய தகவலையும் அவர் விளக்கி கூறினார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அறிக்கை ஒன்றையும் முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநரிடம் வழங்கினார்.

இதனைப்பெற்றுக்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசின் முன்னேற்பாட்டுக்குப் பாராட்டு தெரிவித்தார்.