பூஜ்யத்தை விட வெப்ப நிலை குறைவாகச் சென்றதால், வடமாநிலங்களில் கடுங் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்தியாவில் ஆண்டு தோறும் மார்கழி மற்றும் தை மாதங்களில் குளிர் அதிக அளவில் காணப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தியாவில் மாறி வரும் பருவ நிலை மாற்றங்களால், பல்வேறு இயற்கை மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் வட மாநிலங்களில், அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது.

இதன் காரணமாக, இமாச்சலப்பிரதேசத்தில் வெப்ப நிலையானது பூஜ்யத்தை விட மிக, குறைந்த அளவிற்குச் சென்றுள்ளது. இதனால், பல இடங்களில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது.

குறிப்பாக, சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வருபவர்களுக்குத் தெரியாததால், அனைத்து வாகனங்களும் சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

தலைநகர் டெல்லியிலும் கடுங்குளிர் காரணமாகப் பனிமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அங்கும் சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

இதேபோல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது.

காஷ்மீரில், சாலையே தெரியாத அளவுக்கு, அதிக இடங்களில் பனிப்பொழிவு மலைபோல் குவிந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வாகனத்தை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.