மனைவியிடம் பேசியவரைக் கணவன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மனைவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர், ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

Husband kills man for speaking to wife in Ariyalur

அப்போது, அங்கு கௌஞ்சி வந்துள்ளார். இதனையடுத்து, கௌஞ்சிக்கும் - ரவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கொளஞ்சி, ரவியைக் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.

மேலும், கௌஞ்சியின் குடும்பத்தினர் சிலரும், ரவியை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த ரவியை, அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டார். அப்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Husband kills man for speaking to wife in Ariyalur

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கௌஞ்சி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, மனைவியிடம் பேசியவரை, கணவன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.