ஆபாச நடனம் ஆடிய 21 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற சம காலத்தில் கூட, பெண்கள் இன்னும் ஆபாச பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள் என்பதற்குச் சாட்சி சொல்கிறது இந்த சம்பவம்.

twenty one hyderabad club dancers arrested

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் கிளப் ஒன்றில், இளம் பெண்களை வைத்து ஆபாச நடனம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், கிளப்பில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆபாச நடனத்தைத் தடுத்து நிறுத்தனர். 

இதனையடுத்து, கிளப்பில் ஆபாச நடனம் ஆடிய 21 பெண்களையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், விருந்துக்காக பிரசாத் என்பவர் தங்களைக் கிளப்புக்கு அழைத்து வந்து நடனமாட வைத்தது தெரியவந்தது. 

அத்துடன், போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த பிரசாத், அங்கிருந்து தப்பி தலைமறைவாகி உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 21 பெண்களிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.