தோனிக்காக அவரது ரசிகர்கள் ஏங்கித் தவிக்கும் விதமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளது டிரண்டாகி உள்ளது. 

மும்பையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் மிடில் ஆர்டரில் வீரர்கள் இல்லாமல் போனதால், இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

Dhoni fans waiting eagerly for his return to Cricket

முதலில் விளையாடிய இந்திய இணி 255 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 37.4 ஓவர்களிலேயே எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். 

இதனால், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில், மோசமான தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் டிவிட்டரில் பலவிதமான விமசர்னங்களை முன்வைத்தனர்.

அதன்படி, மற்ற நாடுகளுடன் விளையாடும் போது, மிடல் ஆர்டரில் சீன பெரும் சுவர் போல், பந்துகளைத் தடுத்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வல்லமை தேனிக்கு இருப்பதாகப் பலரும் பதிவிட்டுள்ளனர். 

மேலும், மற்ற வீரர்களுக்கு ஏற்றார் போல், எப்படி பந்து வீச வேண்டும் என்பது, தோனிக்கு தெரியும் என்றும் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து டிவிட் செய்தனர். 

Dhoni fans waiting eagerly for his return to Cricket

அதேபோல், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வென்று காட்டியவர் தோனி என்றும் ரசிகர்கள் புகழாரம் சூட்டினர். இதனால், தொனி குறித்த செய்தி, சமூக வலைத்தளங்களில் விரைவாக வைரலானது.

இதன் பிறகாவது, தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவரா என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் தற்போது எழுந்துள்ளது.