முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஃபெடரருக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. 

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய கழகம் சார்பில்  பொங்கல் திருவிழாவிற்குச் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

TN CM Edappadi Palanisamy plays Tennis in Salem

அதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் பின்புறமாக ஊர்மக்கள் ஒன்றாகச் சேர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய படி பொங்கல் வைத்து இன்று கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பின்னர், தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என அனைத்து விதமான கலை நிகழ்ச்சிகளையும்,  முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 

TN CM Edappadi Palanisamy plays Tennis in Salem

அப்போது, முதலமைச்சர் பழனிச்சாமி, உறியடி விளையாடினார். இதனைப் பார்த்தவர்கள், கை தட்டி ஆராவாரம் செய்தனர். 

மேலும், அங்கு நடைபெற்ற டென்னிஸ் விளையாடி போட்டியையும், அவர் தொடங்கி வைத்தார். பின்னர், மிக சிறப்பாக டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தார்.

TN CM Edappadi Palanisamy plays Tennis in Salem

அதனை அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நேரில் பார்த்து ரசித்தனர். தற்போது, முதலமைச்சர் பழனிச்சாமி டென்னிஸ் விளையாடியது, வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.