இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து ஹாரி வெளியேறுவதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

குடிசையில் வாழ்பவர்கள், கோபுரத்தில் வாழ ஆசைப்படுவது தான் மனித இயல்பு.  

Queen allows prince harry leave royal family

எல்லோரும் பணம் சம்பாதித்து ராஜாவாகத் தான் பார்ப்பார்கள். அல்லது, ராஜ வாழ்க்கை வாழ பார்ப்பார்கள். அவர்கள் சம்பாதிப்பதில், ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதின் மூலம் ஆத்ம திருப்தி அடைந்துகொள்வார்கள்.

ஆனால், கோடீஸ்வரன்கள் யாரும் குடிசையில் வாழ வேண்டும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். அதே நேரத்தில், ராஜாக்கள் எல்லாம் துறவறம் பூண்டதைப் பற்றி நாம் வரலாற்றுக் கதைகளில் தான் படித்திருக்கிறோம்.

அதை மெய்ப்பிக்கும் விதமாக, இந்த நிகழ்காலத்தில் ஒரு இளவரசர் ராஜ வாழ்க்கை திறந்து. எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்வதற்கு முன் வந்துள்ளார்.

ஆம், இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து, மனைவியுடன் இளவரசர் ஹாரி பிரிந்து செல்கிறார்.

Queen allows prince harry leave royal family

அதற்குக் காரணம் பலவாறு கூறுபடுகிறது. குறிப்பாக, டயானா தம்பதியின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை மேகன் மெர்கலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, இங்கிலாந்து அரண்மனையில் இளவரசர் ஹாரி உடன், அவரது மனைவி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். 

இதனிடையே, அவர் நடிகை என்பதால், அவர் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்ற தகவல் பரவியது. இதனையடுத்து, தனது மனைவியுடன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறப்போவதாக, கடந்த மாதம் ஹாரி அறிவித்தார்.

இது தொடர்பாக அவரை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், பலன் அளிக்க வில்லை. இந்நிலையில் ராணி எலிசபெத், தன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து, இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து ஹாரி வெளியேறுவதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த செய்தி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.